மூட்டுவலியை போக்கும் கீரை சூப் - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/05/2020

மூட்டுவலியை போக்கும் கீரை சூப்


உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப்
பெயர் பெற்றது. வைட்டமின்களும், தாதுப்புகளும் நிறைந்தது.
மூட்டழற்சியை சந்துவாதம், மூட்டுவாதம் என்றும் அழைப்பர். உயிர் தாதுக்கள் மூன்று நாடிகளை
உருவாக்குகிறது. அவை வாதம், பித்தம், கபம். இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள்,
எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும்.

இந்த வாதத்தின் தன்மை மேலிட்டால் மலக்கட்டு ஏற்படுகிறது. பேதியானால் வாதம் குறைகிறது.
சித்த முறையில் பொதுவாக வாத நோய்கள் வருவதற்கான காலம், குளிர் காலம்  (ஐப்பசி, கார்த்திகை;
அக்டோபர் 15 முதல் டிசம்பர் 14 வரை). இந்த காலங்களில் வாதநோய் பாதிப்பது அதிகம்.
ஐந்திணைகளில் மருதம் நிலத்தில் (வயலும் வயல் சார்ந்த இடமும்) வசிப்பவர்கள் குறைவாகதான்
பாதிக்கப்படுகின்றனர். வாதம் ஐம்பூதங்களில் காற்று மற்றும் ஆகாயத்தை சார்ந்தது.
அறுசுவையில் இனிப்பு, உப்பு மற்றும் புளிப்பு சுவை வாதத்தை குறைக்கும். அதிகமான துவர்ப்பு, கசப்பு,
மற்றும் காரம் வாதத்தை அதிகப்படுத்தும். ஸ்பக்மன் என்பவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், மூட்டழற்சி
உள்ளவர்கள் 400 நபர்கள் குடலின்  ஜ்கதிர் படத்தை அவர் கவனித்ததில், குடலில் உள்ள பாதிப்பு
வைட்டமின் - சத்து குறைந்தவர்களின் - கதிர் படத்திற்கு ஒத்திருந்ததாம்.
ஆய்வக ஆராய்ச்சியில் அவர்களுக்கு ரத்த சோகையும், ஆரம்ப பாதிப்புள்ளவர்களின் ரத்த வெள்ளை
அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகவும், நாள்பட்ட பாதிப்புள்ளவர்களின் இரத்த வெள்ளை அணுக்களின்
எண்ணிக்கை குறைவாகவும் இருந்துள்ளது. மேலும் அவர்களுக்கு மலச்சிக்கல், குறைந்த வளர்சிதைமாற்ற
அளவு, வயிற்றில் உணவை செரிக்கும் பிசிலி அமிலம் குறைந்தளவு அல்லது  இல்லாமை, கல்லீரல்
சுருக்கம் போன்ற பாதிப்புகளும் இருந்துள்ளது.
இதன் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், மூட்டழற்சியின்போது மூட்டு
மட்டுமல்லாது பிற உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. எனவே செயற்கை வலி நிவாரணிகளால் நமது வலியை
மட்டும் அவ்வப்போது கட்டுப்படுத்தி, அதனால் ஏற்படும் பாதிப்பையும் சேர்த்து அனுபவிப்பது நன்றாகாது.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்தகத்தில் ரசாயன மருந்து வாங்கி சாப்பிட்டு, நாளடைவில்அதனால் உண்டான சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட பலரை பார்க்கும்போது மிகுந்த மனவேதனையாகஉள்ளது.நோய்க்கான மூலகாரணத்தை கண்டறிந்து, அதற்கான உணவுமுறைகளை பின்பற்றினால் குணம் நிச்சயம்என்பதை, மூட்டுவலியால் அவதிப்பட்டு என்னிடம் வந்த நூற்றுக்கணக்கானோர் நலம் பெற்றுஅனுபவித்துள்ளனர்.  
உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப்
பெயர் பெற்றது. வைட்டமின்களும், தாதுப்புகளும் நிறைந்தது.
வாத நோய், நரம்பு நோய் சிகிச்சையில் இந்த கீரை பயன்படுவதாக சமஸ்கிருத எழுத்தாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
இந்த கீரையை அரைத்து, ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து கூழ்ம நிலையில்,
தேய்த்துவந்தால் வலி, வீக்கம், மற்றும் பல்வேறு கட்டிகள் குறைகின்றன.
கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வதன்மூலம், மூலநோய், மலச்சிக்கல்,
பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.
இதன் சிறப்பு குணம், நமது மூட்டுகளில் இருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து, சிறுநீராக
வெளியேற்றுகிறது.
தோசை மாவில் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம்
2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால்
நமக்கு மூட்டு வலிகள் வருவது கடினம்.
முடக்கற்றான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
முடக்கற்றான் காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து தினமும் காலையில்
வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.
சுத்தம் செய்தபின் தண்ணீரை வடிய செய்து நிழலில் விரித்து காய வைத்து,  அரைத்து சலித்துக்
கொள்ளவும். இதை குப்பியில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் இதனை
சாப்பிடலாம்.

முடக்கத்தான் கீரை சூப்

முதலில் முடக்கத்தான் கீரையை தனியாக எடுத்து தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு சட்டியை அடுப்பில்
வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் அறுத்து வைத்த வெங்கா யத்தைப் போட்டு நன்கு
வதக்கவும்.
பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். ஒரு கரண்டி சோளமாவையும் சேர்த்து
நன்கு கலக்கிய பின்னர் முடக்கத்தான் கீரையை போட்டு வதக்கி கொள்ளவும். கெட்டியான பக்குவத்திற்கு
வந்தவுடன் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பைச் சேர்த்து கொதிக்க
வைக்கவும். பத்து நிமிடம் கழித்து திறந்துப்பார்த்தால் சுவையான சூப் ரெடி! சிறிது மிளகுத்தூள் சேர்த்து
சாப்பிட சுவை அதிகமாக இருக்கும்.
4. வாத நாராயணன்வாதரக்காட்சி, ஆதிநாராயணன், வாதரசு, தழுதாழை, வாதமடக்கி என்றும் அழைப்பர். வீக்கம் கரைக்கும்.
குத்தல் குடைச்சல் குணமாகும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும்.கீல் வாதம், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி, கை கால் குடைச்சல், மூட்டு வீக்கம், இடுப்பு வலி,இளம்பிள்ளை வாதம், இழப்பு, சன்னி, மேகநோய் யாவற்றிற்கும் நல்ல மருந்து. மலச்சிக்கல் குணமாக்கும்.இலையைப் போட்டுக் கொதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி குறையும். இதன் இலையை எண்ணெயில்வதக்கி, உளுந்துப் பருப்பு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய், உப்பு, புளி சேர்த்துதுவையல் அரைத்து வாரம் ஒருமுறை உணவில் சாப்பிட பேதியாகும். வாத நோய் குறையும்.இலையை இடித்துப் பிழிந்த சாறு 500 மி.லி. சிற்றாமணக்கு நெய் 500 மி.லி. பூண்டு 100 கிராம், சுக்கு, மிளகு,திப்பிலி வகைக்கு 30 கிராம், வெள்ளைக் கடுகு 20 கிராம் எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் காய்ச்சி, பதத்தில்வடித்து வைத்து, இதில் 5 -10 மில்லி உள்ளுக்குக் கொடுத்து வெந்நீர் அருந்த பேதியாகும். அனைத்து வாதநோய்களும் குறையும்.சொறி சிரங்கிற்கு இதன் இலையுடன் குப்பைமேனி இலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து மேலேதடவி, குளிர்ந்த நீரில் குளித்து வர அவை நீங்கும்.நகச்சுத்தி ஏற்பட்டு கடுமையான வலியுடன் நகக்கண்ணில் வீக்கம் ஏற்பட்டால் இதன் தளிரை மைபோல்அரைத்து வெண்ணெயில் மசித்து வைத்துக் கட்ட இரு நாளில் நல்ல முன்னேற்றம் காணலாம்.இதன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வைத்து மூட்டுகளில் தொக்கணம் செய்வதால்வயதானவர்களுக்கு விரைவில் வலி குறைகிறது.இதன் இலைச்சாறு 1 லிட்டர், மஞ்சள் கரிசலாங்கண்ணி, குப்பை மேனி, கறுப்பு வெற்றிலை இவற்றின் சாறுவகைக்குக் கால் லிட்டர், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர்,சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், சீரகம், மஞ்சள் வகைக்கு 20 கிராம் பொடித்து அரைத்து அரை லிட்டர்
நாட்டு பசும் பாலுடன் கலக்கிப் பதமாகக் காய்ச்சி 21 வெள்ளெருக்கம் பூ நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்துவடிகட்டி மேல்பூச்சாகத் தடவிப் பிடித்து விடப் பக்க வாதம், பாரிச வாயு, நரம்பு இழப்பு முக இசிவு,முகவாதம், கண், வாய், நாக்கு, உதடு, இழப்பு ஆகியவை குறையும்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459