அது எப்படி?
இனி சிலிண்டரை வாட்ஸ் ஆப் மூலம் பூக் செய்யலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனை எப்படி செய்வது என்பது குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குனர் பேசினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் மூலம் சிலிண்டர் புக் செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்தது. இதுதொடர்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குனர் பி. ஜெயதேவன் பேசினார். அதில் அவர், வாட்ஸ் ஆப் மூலம் சமையல் எரிவாயு பூக் செய்ய 7588888824 எனும் எண்ணுக்கு உங்களின் வாட்ஸ் ஆப்-ல் ரீபில் (Refill) என்று அனுப்பி உங்களுக்கான சிலிண்டரை நீங்களே புக் செய்யலாம்.
மேலும், குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க் வரும் அதில் அவர்கள் சிலிண்டர் வினியோகம் செய்த உடன் சரியான கட்டணம் வசூலிக்கப்பட்டதா?
சரியான எடையில் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டதா? சிலிண்டர்களில் சீல் மற்றும் கசிவுகள் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை அளிக்கப்படுகிறதா? என வாடிக்கையாளர் தங்களின் கருத்தை பதிவு செய்துகொள்ளாம் என தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி தங்களின் சிலிண்டரை ட்ராக் செய்து எங்கு இருக்கிறது எனவும் நீங்கள் காணலாம். இதுமட்டுமின்றி, முன்னதாக நடைமுறையில் இருந்து இணையதள சேவை, மிஸ்டு கால் எண் போன்றவைகளும் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment