அரசாணையை மீறிய அதிகாரிகள்....கொரோனா மரணம் ....சர்ச்சையில் அரசு அலுவலகம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/05/2020

அரசாணையை மீறிய அதிகாரிகள்....கொரோனா மரணம் ....சர்ச்சையில் அரசு அலுவலகம்


தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த அலுவலக உதவியாளர் தினகரன் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. “அரசாணையை மீறி பணிக்கு வரச் செய்ததோடு மட்டுமல்லாமல் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே அவரது மரணத்துக்குக் காரணம்” என்று கொதிக்கிறார்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள்.

அரசாணை- 239

என்ன நடந்தது என பயிற்சி நிறுவன வட்டாரத்தில் விசாரித்தோம். இதுகுறித்து நம்மிடம் பேசிய ஊழியர்கள் சிலர், “தமிழக அரசு கடந்த 15-ம் தேதி வெளியிட்ட அரசாணையில் (அரசாணை எண் – 239) அரசு அலுவலகங்கள் 50 சதவிகித ஊழியர்களுடன் பணியாற்றலாம் என்று தெரிவித்திருந்தது. பேட்ச் அடிப்படையில் இரண்டு குழுக்களாகப் பிரித்து இரண்டு நாள்கள் முதல் குழுவும் அதற்கடுத்த இரண்டு நாள்கள் அடுத்த குழுவும் பணியாற்றலாம் என்று கூறப்பட்டிருந்தது.
அடுத்த இரண்டு நாள்களும் முதல் குழு என சுழற்சி முறையில் பணியாற்றலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, அலுவலகங்களுக்குச் செல்ல நாங்கள் தயாரானோம்.
Also Read:
இந்த நிலையில், ஆனால், இதையும் மீறி மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்குப் பணிக்கு வர ஊழியர்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.

அரசாணை 244

அதேபோல், தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் ஊழியர்கள் சென்னையில் உள்ள நிறுவனத்துக்கு கட்டாயம் பணிக்கு வர வேண்டும், இல்லையென்றால் விடுப்பு எடுத்ததாகக் கணக்கில் கொள்ளப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
அரசின் உத்தரவை மீறி பணிக்கு வரச் சொன்னார்கள். அப்படி நாங்கள் பணிக்குச் செல்லத் தயாரானாலும், அலுவலகங்களில் போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இதற்கு உதாரணம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்த ஒருவர், கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார்.
நாங்கள் வேலைக்கு வரத் தயாராக இருந்தாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதுமில்லாததால் ஊழியர்களிடையே அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய முடிவெடுக்கும் என்று நம்புகிறோம்’’ என்று வேதனை தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read:
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் உஷாராணியைத் தொடர்புகொண்டு கேட்டோம்
. “இதுதொடர்பாக விளக்கம் வேண்டும் என்றால் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளைத் தொடர்புகொண்டு நீங்கள் கேட்கலாம். அதைப் பற்றி எங்கள் உயரதிகாரிகளிடம் கேளுங்கள். நான் எதுவும் விளக்கம் கொடுப்பதற்கில்லை’’ என்றார்.
அதேபோல், அலுவலக உதவியாளர் தினகரன் குறித்த கேள்வியை நாம் முன்வைத்தோம். அதற்கு, “அவர் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியவில்லை. எஸ்.சி.இ.ஆர்.டி அலுவலக ஊழியர் அவர். இதுகுறித்தும் நீங்கள் கல்வித் துறை உயரதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும்’’ என்றதோடு முடித்துக்கொண்டார்.

1 comment:

  1. Not only scert coimbatore ssa also same threatening. Some lady brtes coming nearly 160km up and down by two wheeler. Nobody bothers.

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459