குறைவான சோதனை.. ஆனால் இன்றுதான் அதிக கொரோனா கேஸ்கள்.. தமிழகத்தில் என்ன நடக்கிறது? - பின்னணி! - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/05/2020

குறைவான சோதனை.. ஆனால் இன்றுதான் அதிக கொரோனா கேஸ்கள்.. தமிழகத்தில் என்ன நடக்கிறது? - பின்னணி!



சென்னை: தமிழகத்தில் சராசரி கொரோனா சோதனைகளை விட குறைவான சோதனைகள் செய்தும் கூட இன்று அதிக அளவில் கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. ஏன் இத்தனை கேஸ்கள் வந்தது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது தமிழகத்தில் எதிர்பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக அதிக கேஸ்கள் பரவிய நிலையில், இன்று அதை விட அதிகமாக தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 17000ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 17082 ஆக உயர்ந்துள்ளது.
இன்றுதான் அதிகம்தமிழகத்தில் இதுவரை ஏற்பட்ட கேஸ்களில் இன்றுதான் மிக அதிக பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மே 20ம் தேதி 743 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன் பிறகு 21ம் தேதி 776 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. 22ம் தேதி 786 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. 23ம் தேதி 759 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. 24ம் தேதி 759 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.வேகம் எடுத்ததுஅதன்பின் 25ம் தேதி 805 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வேகமாக கேஸ்கள் அதிகரித்த நிலையில் இன்று கேஸ்கள் உச்சம் தொட்டுள்ளது. தமிழகத்தில் சராசரி கொரோனா சோதனைகளை விட குறைவான சோதனைகள் செய்தும் கூட இன்று அதிக அளவில் கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.குழப்பம் ஏற்பட்டுள்ளதுஏன் இத்தனை கேஸ்கள் வந்தது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது தமிழகத்தில் சராசரியாக தினமும் 13000 ஆயிரம் கொரோனா சோதனைகள் செய்யப்படும். சராசரியாக 650-700 கேஸ்கள் வரும். ஆனால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 11835 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா சோதனைகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.தீவிரம் அடைந்துள்ளதாஇப்படி குறைவான சோதனை செய்யப்பட்டும் தமிழகத்தில் அதிக கேஸ்கள் வந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்துவிட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. அல்லது வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பலர் வருகின்றனர். இப்படி தமிழகம் வந்தவர்களில் இன்று மட்டும் 92 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. முக்கியமாக மகாராஷ்டிராவில் இருந்து பலர் இப்படி கொரோனாவோடு வருகிறார்கள். இவர்கள் மூலம் அதிக கேஸ்கள் வருகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.குறைந்த சோதனைதமிழகத்தில் 11 ஆயிரம் சோதனைகள் செய்யும் போதே இத்தனை கேஸ்கள் வருகிறது. மீண்டும் தமிழகத்தில் பழையபடி 14000 சோதனைகள் செய்தால் இன்னும் அதிக கேஸ்கள் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இன்றுதான் பலி எண்ணிக்கையும் மிக அதிகமாக வந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது.கொரோனா டார்கெட் டெஸ்டிங்தமிழகத்தில் தற்போது டார்கெட் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இதுவும் கூட கேஸ்கள் அதிகரிக்க காரணம் ஆகும். டார்கெட் டெஸ்ட் என்றால் கொரோனா இருக்க அதிக வாய்ப்புள்ள நபர்களை சோதனை செய்வது. அறிகுறி இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக கொரோனா சோதனை செய்ய வேண்டும். இப்படி தமிழகத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் டார்கெட் கொரோனா சோதனை செய்யப்படுகிறார்கள். இதுவும் காரணம் ஆகும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459