கால் விரல்கள் சிவந்து காணப்படுதா ? கொரோனாவா இருக்கலாம்.... - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/05/2020

கால் விரல்கள் சிவந்து காணப்படுதா ? கொரோனாவா இருக்கலாம்....



கால் விரல்கள் சிவந்து காணப்படுவதும் கரோனாவுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த தோல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கை அல்லது கால் விரல்களின் சருமம் சற்று சிவந்து அல்லது வீங்கி அல்லது இரண்டுமே இருந்து வலி ஏற்படுவதும் கரோனாவுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
பெரும்பாலும், கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாத சிறுவர்கள், இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதினருக்கு இந்த அறிகுறி மட்டும் தென்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில், இருமல், காய்ச்சல், தலைவலி மட்டுமே கரோனாவுக்கான அறிகுறிகளாக சொல்லப்பட்டு வந்த நிலையில்
, முகரும், ருசி அறியும் திறனை இழத்தல், வயிற்றுப் போக்கு, குளிர் மற்றும் குளிருடன் நடுக்கம் போன்றவையும் கரோனாவுக்கான அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டன. இதில் தற்போது புதிதாக இணைகிறது கால்விரல் வீக்கம்.

ஆனால், இது ஒரு நல்ல அறிகுறி என்றும் சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது, உடலுக்குள் வந்த கரோனா கிருமியை எதிர்த்து நமது நோய் எதிர்ப்பு சக்தி போராடுவதையே இந்த அறிகுறி காட்டுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்காவின் சுகாதாரத் துறை அதிகாரிகள், கால் விரல்கள் சிவப்பதை கரோனாவுக்கான அறிகுறிகளின் பட்டியலில் இன்னமும் சேர்க்கவில்லை. அந்த மாற்றத்தை ஏற்படுத்த தோல் மருத்துவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
அப்படி இணைக்கப்பட்டால்தான் கால்விரல்கள் சிவந்து இருப்பவர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்த முடியும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
ஒரு வேளை யாருக்காவது கால் விரல்கள் சிவந்து காணப்பட்டால் உடனடியாக உங்கள் குடும்ப நல மருத்துவரை அல்லது தோல் மருத்துவரை நாடி ஆலோசனை பெறுங்கள்.
உடனடியாக கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்குச் சென்று விடாதீர்கள், அங்கு உங்களுக்கு கரோனா பரவலாம் அல்லது, நீங்கள் யாருக்காவது கரோனாவைப் பரப்பலாம் என்றும் எச்சரிக்கிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு சிலர்தான் கால் சிவத்தல் பிரச்னையோடு வருவார்கள். ஆனால் இப்போது ஒரு நாளைக்கு 10க்கும் மேற்பட்டவர்கள் இந்த பிரச்னையோடு மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
அதே சமயம், கால் விரல்கள் சிவத்தல் போன்ற பிரச்னைகள்,
நீங்கள் விரைவில் குணமடையப் போகிறீர்கள் என்பதையே காட்டுவதாகவும், அதற்காக யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும், ஒரு வேளை முழு உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கும், அதிகப்படியான குளிர்ச்சி போன்ற காரணங்களாலும் இந்த கால்விரல் சிவத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் கால் விரல்கள் வீங்கலாம், பிறகு அது சிவந்து வலியை ஏற்படுத்தும். சில சமயம் வீங்கும் விரல் மட்டும் சற்று நீல நிறமாகவும் மாறலாம் என்றும் மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459