‘
ஆயுர்வேத மூலிகை அஸ்வகந்தாவில் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் ஆன்டி வைரல் தன்மை இருக்கிறது. அதனால் அஸ்வகந்தாவை கொரோனா சிகிச்சைக்கான மருந்திலும், கொரோனா வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பிலும் பயன்படுத்தலாம்’ என்று டெல்லி ஐ.ஐ.டியின் ஆராய்ச்சியாளர்களும், ஜப்பானின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்டு இண்டஸ்ட்ரியல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் ஆராய்ச்சியாளர்களும் (AIST) இணைந்து தங்கள் ஆய்வு முடிவை அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பான ஆராய்ச்சியை மினிஸ்ட்ரி ஆஃப் ஆயுஷ் ஆரம்பிக்க உள்ள நிலையில், அஸ்வகந்தாவின் மருத்துவக் குணங்கள், அது எப்படி கொரோனாவுக்கு எதிராகச் செயல்படும் என்று ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்.
“ஆயுர்வேத மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைக்கிற மூலிகை மருந்துகளில் ஒன்று, அஸ்வகந்தா. ‘அஸ்வம்’ என்றால் குதிரை. ’கந்தம்’ என்றால் வாசனை. இந்த மூலிகையில் குதிரையின் வாசம் வீசும் என்பதால் இந்தப் பெயர். தமிழில் இதை ’அமுக்குரா கிழங்கு’ என்போம். இதில் சீமை அமுக்குரா, நாட்டு அமுக்குரா என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. நாட்டு அமுக்குரா பார்ப்பதற்குத் தடிமனாக, உருண்டையாக இருக்கும். சீமை அமுக்குரா பார்ப்பதற்குக் குச்சிக் குச்சியாக இருக்கும். இதில்தான் மருத்துவக் குணங்கள் அதிகம். சீமை அமுக்குராவை உள்ளுக்குத் தருகிற மருந்துகளிலும், நாட்டு அமுக்குராவை வெளிப்பூச்சுக்குப் பயன்படுத்துகிற மருந்துகளிலும் பயன்படுத்துவோம்.
ஜலதோஷம், இருமல் போன்ற தொற்றுகளை எளிதில் சரிசெய்கிற மூலிகை இது. குறிப்பாகப் பருவநிலை மாறும்போது திடீரென வருகிற சளி, காய்ச்சலை உடனடியாகச் சரிசெய்வதில் அஸ்வகந்தாவை எக்ஸ்பர்ட் என்றே சொல்லலாம்.
அஸ்வகந்தா (அமுக்குரா)வை இரவில் பாலில் கலந்து குடித்தால், தூக்கம் நன்கு வரும். ஸ்ட்ரெஸ் இருப்பவர்களுக்கு மனம் அமைதியாகும். மனப்பதற்றம் இருப்பவர்களுக்கு அஸ்வகந்தாவைத்தான் ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரை செய்வோம்.
பல காலம் நோய்வாய்ப்பட்டவர்கள் நோய் சரியானாலும் பலவீனமாக இருப்பார்கள். சிலர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத காரணத்தால் பலவீனமாக இருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு உடலை பலமாக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும் அஸ்வகந்தாவைப் பரிந்துரைப்போம். எல்லாவற்றையும்விட சுவாச உறுப்புகளில் ஏற்படுகிற பிரச்னைகளை இது சரிசெய்யும். நுரையீரலை பலப்படுத்தும். மூச்சிரைப்பை சரிசெய்யும். கொரோனா வைரஸ் மனிதர்களின் சுவாசப்பாதை மற்றும் நுரையீரலில் பிரச்னை ஏற்படுத்தும் என்பதால்தான், அஸ்வகந்தாவில் இருந்து கொரோனாவுக்கான மருந்து மற்றும் தடுப்பூசி தயாரிக்கலாம் என்று சொல்லிருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு உடலை பலமாக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும் அஸ்வகந்தாவைப் பரிந்துரைப்போம். எல்லாவற்றையும்விட சுவாச உறுப்புகளில் ஏற்படுகிற பிரச்னைகளை இது சரிசெய்யும். நுரையீரலை பலப்படுத்தும். மூச்சிரைப்பை சரிசெய்யும். கொரோனா வைரஸ் மனிதர்களின் சுவாசப்பாதை மற்றும் நுரையீரலில் பிரச்னை ஏற்படுத்தும் என்பதால்தான், அஸ்வகந்தாவில் இருந்து கொரோனாவுக்கான மருந்து மற்றும் தடுப்பூசி தயாரிக்கலாம் என்று சொல்லிருக்கிறார்கள்.
Also Read:
ஆயுர்வேதத்தின்படி, நம் உடலில் இருக்கிற 7 தாதுகளின் சாராம்சம்தான் இம்யூனிட்டி என்கிற நோய் எதிர்ப்பு சக்தி. அஸ்வகந்தா இதைத் தூண்டிவிடும்.
அஸ்வகந்தா பொடியைப் பொதுவாகத் தேனில் அல்லது நெய்யில் குழைத்துச் சாப்பிடச் சொல்வோம். நீரிழிவுப் பிரச்னை இருப்பவர்கள் இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சர்க்கரை சேர்க்காத பாலில் கலந்து குடிக்கலாம். இது லேகியம் மற்றும் சிரப்பாகவும் கிடைக்கிறது. இதைப் பெரியவர்கள் ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். சிறியவர்களுக்கு என்றால் அரை டீஸ்பூன்.
Also Read:
நோய் எதிர்ப்பு சக்தியிலும் நுரையீரலிலும் பிரச்னை இருப்பவர்கள் மட்டுமல்ல, உடலில் எந்த நோயும் இல்லாதவர்கள்கூட அஸ்வகந்தாவை எடுத்துக்கொள்ளலாம். பிறந்த குழந்தைகளுக்குக்கூட கொரோனா தொற்று ஏற்படலாம் என்பதால், பாலூட்டுகிற அம்மாக்களும் அஸ்வகந்தாவைச் சாப்பிடலாம். ஆனால், எல்லோருமே ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் சாப்பிட வேண்டும். தன்னிச்சையாக அஸ்வகந்தாவை எக்காரணம்கொண்டும் சாப்பிடக்கூடாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார் மருத்துவர் பாலமுருகன்.
No comments:
Post a Comment