சீர்காழி வட்டம், கொள்ளிடம் ஒன்றியம் திருமயிலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மற்றும் சத்துணவு அமைப்பாளர் சார்பாக கொரோனாகால நிவாரணப் பொருள்களாக அரிசி, மளிகை, பிஸ்கட் மற்றும் முகக் கவசங்கள் தலைமை ஆசிரியை நா. பிரேமா தலைமையில் 84 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சீர்காழி வட்டாரக்கல்வி அலுவலர் பூவராகன்,கீரா நல்லூர் தலைமையாசிரியர், ஆனந்தக்கூத்தன் தலைமையாசிரியர் மற்றும் பட்டிய மேடு ஆசிரியர்கலந்துக் கொண்டனர்.