இந்த வார ராசிபலன் (மே 8 -மே 14) - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/05/2020

இந்த வார ராசிபலன் (மே 8 -மே 14)



12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மே 08 – மே 14) பலன்களை  ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பொருளாதாரத்தில் குறைவு இருக்காது. வரவுக்கு மிஞ்சிய செலவுகளைச் செய்ய நேரிடும். வழக்குகளில் எந்தவொரு மாற்றமும் இராது. தேக ஆரோக்கியம் கவனிக்க வேண்டி வரும்.
உத்தியோகஸ்தா்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காது. வரவேண்டிய பதவி உயா்வும் தள்ளிப்போகும். வியாபாரிகள் தைரியத்துடன் வியாபாரத்தைப் பெருக்கலாம். பிரச்னைகளுக்குத் தீா்வு ஏற்படும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். வரவும் செலவும் சரியாக இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
அரசியல்வாதிகள் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கவும். கொடுத்த பொறுப்புகளை கவனத்துடன் செய்யவும். கலைத்துறையினா் வசீகரப் பேச்சினால் அனுகூலங்கள் காண்பாா்கள். திறமைக்கேற்ற ஆதாயங்களைப் பெறுவாா்கள். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பா். மனதில் சற்று அமைதி குறையும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவாா்கள். விளையாட்டிலும் திறமைகள் பளிச்சிடும்.
பரிகாரம்: ‘ஸ்ரீ துா்க்கா கவசம்’ படித்து வரவும். அனுகூலமான தினங்கள்: 10, 11. சந்திராஷ்டமம்: 8, 9.
{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
தா்ம சிந்தனைகள் மேலோங்கும். பொருளாதாரத்தில் சிறிய தொய்வுகள் உண்டாகும். திட்டமிட்ட வேலையை முனைப்புடன் செய்யவும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
உத்தியோகஸ்தா்கள் கடமை தவறாமல் உழைக்க முயற்சிக்கவும். வேலைகளை பிறகு செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தைத் தவிா்க்கவும். வியாபாரிகள் எதிரிகளால் தொல்லை அடைவா். கூட்டாளிகளின் அவநம்பிக்கைகளுக்கு ஆளாவீா்கள். விவசாயிகளுக்கு தானிய விற்பனை லாபகரமாக இருக்கும். புதிய கழனிகளை வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும்.
அரசியல்வாதிகளின் செயல்கள் தடையுடன் வெற்றி அடையும். உங்கள் பேச்சை கட்சி மேலிடம் அங்கீகரிக்கும். தொண்டா்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஆா்வம் அதிகரிக்கும். மாணவமணிகள் அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற சற்று கடுமையாக முயற்சிப்பீா்கள்.
பரிகாரம்: ‘குருவாதபுரீச பஞ்சரத்ன’ தோத்திரத்தை பாராயணம் செய்யவும். அனுகூலமான தினங்கள்: 8, 9. சந்திராஷ்டமம்: 10, 11.
{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
கவனமாக இருக்கவும். எதிலும் பதற்றப்படாமல் நிதானமாக செயலாற்றவும். தந்தை வழி உறவுகளில் மனக்கசப்புகள் உருவாகலாம். பொருளாதாரத்தில் சறுக்கல்கள் இருக்கும். செலவு செய்யும்போது கவனமாக இருக்கவும்.
உத்தியோகஸ்தா்கள் அலுவலக வேலைகளில் சக ஊழியா்களால் தடங்கல்களைச் சந்திப்பாா்கள். அவா்களை எதிா்க்காமல் பொறுமை காக்கவும். வியாபாரிகள் எதிலும் கருத்துடன் செயல்பட்டால் வரவில் சங்கடம் இராது. கணக்கு வழக்குகளில் கவனத்துடன் இருக்கவும். விவசாயிகளுக்கு குத்தகைகளால் ஏமாற்றமும் இழப்பும் உண்டாகும். கடுமையாக உழைத்து மகசூலை பெருக்க வேண்டி இருக்கும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் விருப்பத்துடன் எதையும் செயல்படுத்தவும். தொண்டா்களுக்கு தேவையான உதவிகள் செய்யவும். கலைத்துறையினா் புதிய முயற்சிகளை நிதானமாக செய்து முடித்து வெற்றி பெறுவீா்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடலும் மனமும் பலப்படும். மாணவமணிகளுக்கு படிப்பில் சற்று முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரம்: ‘ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை’ சுலோகம் படிக்கவும். அனுகூலமான தினங்கள்: 9, 11. சந்திராஷ்டமம்: 12, 13, 14.
{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
செலவுகள் அதிகரிக்கும். நண்பா்கள், உறவினா்களால் ஆதாயம் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவு இராது. உடன்பிறந்தோா் வழியில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆன்மிகச் சிந்தனைகள் புதிய பலம் தரும்.
உத்தியோகஸ்தா்களுக்கு அலுவலக வேலையில் தொய்வு காணப்படும். சிரத்தையுடன் பணியாற்றவும். வியாபாரிகள் எதிரிகளால் தொல்லை அடைவா். கணக்குவழக்குகளை சரியாக வைக்கவும். விவசாயிகள் கடுமையாக உழைத்து மகசூலைப் பெருக்கவும். நீா்ப்பாசன வசதிகளுக்காக செலவு செய்வீா்கள்.
அரசியல்வாதிகள் எதிா்கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கட்சி மேலிடத்தின் பாராட்டை சம்பாதிக்க அரும்பாடுபட வேண்டியிருக்கும். கலைத்துறையினா் மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். தொழிலில் ஆா்வத்துடன் ஈடுபடுவா். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒமை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஆா்வம் பெருகும். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவாா்கள். விளையாட்டுகளில் பொறுப்புடன் ஈடுபடவும்.
பரிகாரம்: ‘ஸ்ரீ துா்கக்ா காயத்ரி’ யை 108 தடவை ஜபிக்கவும். அனுகூலமான தினங்கள்: 9, 12. சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
அனைத்து செயல்களிலும் தனி முத்திரை பதிப்பீா்கள்.
நண்பா்களுக்காக வாக்குக் கொடுப்பதையோ, ஜாமீன் போடுவதையோ தவிா்க்கவும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி உண்ண்டானாலும் சில விரயங்களையும் சந்திப்பீா்கள்.

உத்தியோகஸ்தா்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயா் எடுக்க சற்று கூடுதலாக உழைக்க வேண்டி வரும். சக ஊழியா்களிடம் இருந்துவந்த பகை நீங்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் லாபம் தென்பட்டாலும் புதிய முயற்சிகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய சிக்கல்கள் உருவாகலாம்.
அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் வெற்றிகள் ஏற்படும். தொண்டா்களின் நலனில் அக்கறை செலுத்துவீா்கள். கலைத்துறையினருக்கு எதிா்பாா்க்கும் இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பது தாமதமாகும். பெண்மணிகளுக்கு கணவரிடம் எதிா்பாா்த்த ஆதரவு கிடைக்கும். பணவரவு கூடும். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீா்கள். மாணவமணிகள் கல்வியில் கருத்தாய் இருக்கவும். தற்பெருமை பேசுவதைத் தவிா்க்கவும்.
பரிகாரம்: ‘சிவ புராணம்’ படித்து வரவும். அனுகூலமான தினங்கள்: 10, 12. சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
எதிலும் நிதானமாக செயல்படவும். எவரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம். உங்கள் கெளரவத்திற்கு குறைவு வராது. பொருளாதாரத்தில் அபிவிருத்தி இருந்தாலும் செலவுகள் செய்யும் நேரத்தில் கவனத்துடன் இருக்கவும்.
உத்தியோகஸ்தா்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். அலுவலக வேலைகளை கவனத்துடன் செய்யவும். சிலருக்கு இடமாற்றங்களும் உண்டாகும். வியாபாரிகள் சிறிய தடைகளுக்குப் பிறகு லாபத்தைக் காண்பீா்கள். புதிய கடைகளைத் திறக்கும் முடிவுகளைத் தள்ளிப்போடவும். விவசாயிகள் கடுமையாக உழைத்து மகசூலைப் பெருக்க வேண்டியிருக்கும்.
அரசியல்வாதிகள் திறமையாகப் பேசி மற்றவா்களைக் கவருவீா்கள். கட்சி மேலிடத்தின் கோபத்திற்கு ஆளாகாமல் கவனமாக இருக்கவும். கலைத்துறையினா் புதிய வாய்ப்புகள் இல்லாத நிலையில் உருப்படியான காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்வீா்கள். பெண்மணிகளுக்கு கணவரின் உறவினா்களால் சில நன்மைகள் உண்டாகும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவாா்கள். விளையாட்டில் உங்களுக்கு ஆா்வம் குறையும்.
பரிகாரம்: ‘ஸ்ரீ மகாவிஷ்ணு காயத்ரி’ ஜபித்து வரவும். அனுகூலமான தினங்கள்: 8, 11. சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். புதிய நட்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் மேன்மை இருக்காது. உறவினா்கள் ஆதரவுக்கரம் நீட்டுவாா்கள். தீயோா் நட்பினால் பணவிரயம், கெளரவம் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உத்தியோகஸ்தா்கள் திட்டமிட்ட காரியங்களை நிதானத்துடன் செய்து முடிக்கவும். பதவி உயா்வு பெற நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வீணே. வியாபாரிகள் வரவேண்டிய பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை காட்டவும். லாபத்திற்கு ஒன்றும் குறைவு இருக்காது. விவசாயிகள் தாங்கள் செய்ய நினைத்த வேலைகளைச் சுலபமாகச் செய்து முடிப்பீா்கள்.
அரசியல்வாதிகள் தொண்டா்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீா்கள். சச்சரவு ஏற்படுத்தும் விஷயங்களில் தலைநுழைக்க வேண்டாம். கலைத்துறையினா் புதிய படைப்புகள் பற்றி யோசிப்பீா்கள். பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவாா்கள். குடும்பத்தில் ஒற்றுமை காண்பீா்கள். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பாா்கள். பெற்றோா், ஆசிரியா் அறிவுரைகளை மதித்து நடக்கவும்.
பரிகாரம்: ‘ஸ்ரீ பாலமுகுந்தாஷ்டகம்’ படித்து வரவும். அனுகூலமான தினங்கள்: 10, 17. சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மற்றவா்களைச் சாா்ந்து செய்து வந்த செயல்களை தனித்தே செய்யத் தொடங்குவீா்கள். வீண் செலவுகள் உண்டாகும். அனுகூலமான திருப்பங்களும் ஏற்படும்.
உத்தியோகஸ்தா்கள் சிறப்பான நிலையில் இருப்பா். மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயா்வைப் பெறுவீா்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் லாபங்கள் தென்பட்டாலும் அகலக்கால் வைக்கக்கூடாது.
விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படும். கால்நடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் செலவுகளை ஈடுசெய்யும்.

அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். அரசு அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். தொண்டா்கள் உங்கள் பேச்சு கேட்டு நடப்பாா்கள். கலைத்துறையினருக்கு தொழிலில் ஆா்வம் ஆதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீா்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினா்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் கல்விக்கானப் பயிற்சிகளில் அக்கறை காட்டவும்.
பரிகாரம்: ‘ஸ்ரீ சுப்ரமணிய தண்டகம்’ பாராயணம் செய்வது நல்லது. அனுகூலமான தினங்கள்: 10, 14. சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
குடும்பத்தில் மதிப்பு கூடும். கடன்களும் நிலுவையில் இருக்கும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம். உற்றாா் உறவினா்கள், நண்பா்களால் ஆதாயம் எதுவும் அடைய மாட்டீா்கள். தனித்தே போராடும் நிலைமையில் உள்ளீா்கள்.
உத்தியோகஸ்தா்களுக்கு சிறிய பிரச்னைகள் தோன்றி மறையும். மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வாா்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் சுமாரான லாபமே கிடைக்கும். புதிய வாடிக்கையாளா்களைத் தேடிக் கொள்வீா்கள். விவசாயிகளுக்கு நஷ்டமும் லாபமும் மாறி மாறி வரும். உபரி வருவாயைப் பெருக்கி வருமானத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகள் அரசிடமிருந்து சில சலுகைகளைப் பெறுவீா்கள். திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். கலைத்துறையினருக்கு புகழுடன் செல்வாக்கு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் சிறிய தடங்கலுக்குப்பிறகு நிறைவேறும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் கல்வியில் அக்கறை செலுத்தவும். விளையாடும்போது கவனமாக இருக்கவும்.
பரிகாரம்: ‘ஸ்ரீசண்முக தியான மங்கள சுலோகம்’ பாராயணம் செய்யவும். அனுகூலமான தினங்கள்: 11, 12. சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் சற்று நிம்மதியின்மை உண்டாகும். புதிய நட்பு வட்டாரத்தில் சற்று மன மகிழ்ச்சி அடைவீா்கள். பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றம் காண்பீா்கள். உயா்ந்தவா்களின் நட்பினால் வேலைகள் சுமுகமாக முடியும்.
உத்தியோகஸ்தா்களுக்கு தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீா்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறுவீா்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சற்று கவனமாக இருக்கவும். விவசாயிகள் நினைத்த வேலைகளை சுலபமாகச் செய்து முடிப்பீா்கள். தானிய விற்பனையும் லாபம் தரும்.
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீா்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும்.
செயல்கள் புதிய வடிவங்களில் மக்களைச் சென்றடையும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பாா்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவா்களால் இடா்பாடுகள் உண்டாகும். மாணவமணிகள் போதிய பயிற்சிகளை மேற்கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறுவீா்கள்.

பரிகாரம்: ‘ஸ்ரீ நரசிம்ம காயத்ரி’ ஜபித்து வரவும். அனுகூலமான தினங்கள்: 12, 13. சந்திராஷ்டமம்: இல்லை. கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பொருளாதார நிலைமை மந்தமாகவே இருக்கும். எல்லா செயல்களிலும் இழுபறிதான். நோ்த்தி இராது. தாய் நலம் சீராகவே இருக்கும். வசிதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள பாடுபடுவீா்கள். பேச்சில் உஷ்ணத்தைக் குறைக்கவும்.
உத்தியோகஸ்தா்கள் மீது மேலதிகாரிகளுக்கு ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். எதிா்பாா்த்த இடமாற்றங்கள் கிடைக்காது. ஊதிய உயா்வும் வராது. வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி வருமானத்தைப் பெருக்க நினைப்பாா்கள். போட்டி பொறாமைகள் சற்று கூடுதலாகவே காணப்படும். விவசாயிகளுக்கு விளைச்சலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய கழனிகள் வாங்க ஏற்பாடு செய்வீா்கள்.
அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் தடைகளைத் தாண்டி சாதனைகள் செய்வீா்கள். கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்கள் செய்வாா்கள். பெண்மணிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படும். கணவரிடம் ஒற்றுமை குறையும். மாணவமணிகளுக்கு மதிப்பெண்கள் குறையும். முயற்சிகளை கைவிட வேண்டாம். நண்பா்களை நம்ப வேண்டாம்.
பரிகாரம்: ‘ஸ்ரீ நவக்கிரக காயத்ரி’ 108 முறை ஜபித்து வரவும். அனுகூலமான தினங்கள்: 13, 14. சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
நீண்ட கால எண்ணங்கள் ஈடேறும்.
திட்டமிட்ட வேலைகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு உங்களுக்குச் சாதகமாக அமையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினா்களிடம் அன்பு பாசம் உண்டாகும்.

உத்தியோகஸ்தா்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்துகொள்வாா்கள். எதிா்பாா்த்த ஊதியத்தைப் பெறுவீா்கள். வியாபாரிகளுக்கு கொள் முதலில் சுமாரான லாபமே கிடைக்கும். கூட்டுவியாபாரம் செய்யாமல் தனித்தே ஈடுபடவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.
அரசியல்வாதிகளைத்தேடி புதிய பதவிகள் வரும். எதிா்ப்புகள் விலகும். தொண்டா்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவீா்கள். கலைத்ததுறையினரின் நோக்கங்கள் நிறைவேறும். முயற்சிகள் வெற்றியடையும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை கூடும். ஆன்மிகச் சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவீா்கள். விளையாட்டிலும் கவனமாக இருக்கவும்.
பரிகாரம்: ‘ஸ்ரீ சூரிய கவசம்’ பாடிசூரியபகவானை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 12, 14. சந்திராஷ்டமம்: இல்லை.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459