தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரேநாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரேநாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1-ந்தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் சராசரியாக 500-யை தாண்டிய வண்ணம் உள்ளது. கோயம்போடு மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் மூலம் பரவியதுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
நேற்று 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் இன்று 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய எண்ணிக்கைதான் இதுவரை உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 798 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது.