சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி இன்று 759 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 14,753-ல் இருந்து நேற்று 15,512 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழகம் திரும்பிய 24 பேருக்கும், ராஜஸ்தானில் இருந்து திரும்பிய 6 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 7,915 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று 5 பேர் உயிரிழந்தததை அடுத்து கரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98-ல் இருந்து 103 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5 பேர் உயிரிழந்தததை அடுத்து கரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98-ல் இருந்து 103 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 363 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment