இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 60 ஆயிரத்தை எட்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,662 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 1981.மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 19,063 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் 731 ஆக அதிகரித்திருக்கிறது. இம்மாநிலத்தைத் தொடர்ந்து குஜராத்தில் 7402 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 449 ஆக உயர்ந்துள்ளது. 3-வது இடத்தில் டெல்லி மாநிலம் உள்ளது. டெல்லியில் 6318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 68 பேர் மரணமடைந்துள்ளனர். ரஷ்யாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு.. ஸ்பெயினை முந்தும் வேகம் தமிழகத்ததில் 40 பேர் மரணமடைந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6009 ஆக உயர்ந்திருக்கிறடு.
தமிழகத்தில் 1605 பேர் குணமடைந்தும் உள்ளனர். மத்திய பிரதேசத்தில் 3341 பேரும் ராஜஸ்தானில் 3579 பேரும் பஞ்சாப் மாநிலத்தில் 1731 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உ.பி.யில் 66 பேரை பலி கொண்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3214 ஆகும்.அதேநேரத்தில் ://.19. புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 62,866 ஆகவும் உயிரிழப்பு 2,102 ஆகவும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.