சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு புதிய தேதி ஜூன் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/05/2020

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு புதிய தேதி ஜூன் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும்


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தேதி ஜூன் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
2020-21ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வருகிற மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில்
, தற்போது ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நடைபெறும் புதிய தேதி குறித்து மே 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கரோனா அச்சுறுத்தலினால் ஊரடங்கு 4 ஆம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு நடைபெறும் புதிய தேதி ஜூன் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459