அரசு ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் வயது 59 ஆக உயர்வு. : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எதிர்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/05/2020

அரசு ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் வயது 59 ஆக உயர்வு. : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எதிர்ப்பு


தூத்துக்குடி: அரசு ஊழியர்களுக்கு ஓய்வுபெறும்  வயதை 58 இல் இருந்து 59 ஆக உயர்த்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. 
இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம் எஸ் முத்து தலைமையில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் நிர்வாகிகள் ஆசாத், காஸ்ட்ரோ, ராம்குமார் , ஜேம்ஸ் , ராஜ்குமார் , கார்த்தி ,விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459