ஞாயிறன்று 3041 புதிய தொற்றுக்களுடன் இந்தியாவில் தொற்று அதிகம் ஆட்டிப்படைக்கும் மாநிலமாக மகாராஷ்ட்ரா ஆனது, பாதிப்பு எண்ணிக்கை 50,000 என்ற எண்ணிக்கையை கடந்து அச்சுறுத்துகிறது.
கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,231 அதிகரித்ததோடு மேலும் 58 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை 1,635 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பில் 33,988 கேஸ்கள் சிகிச்சையில் உள்ளன.
குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 14,600 ஆக இருக்கிறது.
அச்சுறுத்தும் விஷயம் என்னவெனில் மே 21 தேதி 40,000 ஆக இருந்த தொற்று 72 மணி நேரங்களில் 50,000த்தைக் கடந்தது என்பதே.
நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 30% மகாராஷ்ட்ராவில், நாட்டின் பலி எண்ணிக்கையில் மகாராஷ்ட்ராவில் மட்டும் 40% பலிகள். புதிய தொற்றில் 1,725 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் மும்பையில் மட்டும் 30,000த்தைக் கடந்துள்ளது. அதாவது 30,251 தொற்று நோயாளிகள் மும்பையில் மட்டும் உள்ளனர். மும்பையில் பலி எண்ணிக்கை மட்டும் 988 ஆக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி மகாராஷ்ட்ராவில் 4,99,387 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். 35,107 பேர் நிறுவன தனிமைப்பிரிவில் உள்ளனர்
தற்போதைய நிலவரப்படி மகாராஷ்ட்ராவில் 4,99,387 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். 35,107 பேர் நிறுவன தனிமைப்பிரிவில் உள்ளனர்
No comments:
Post a Comment