40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்!!! - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/05/2020

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்!!!


10ரூபாய்க்கு_கிடைக்கும்_சத்தான_மூலிகைகள்...!!!!

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்!!!

🍁அகத்தி கீரை 🍁

      ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை
     தெளிய வைக்கும்.

🍁காசினிக் கீரை🍁

     சிறுநீரகத்தை நன்கு செயல்பட
     வைக்கும். உடல் வெப்பத்தை
      தணிக்கும்.

🍁சிறு பசலைக் கீரை 🍁

     சரும நோய்களைத் தீர்க்கும்
     பால்வினை நோயை குறைக்கும்.

🍁பசலைக் கீரை 🍁

      தசைகளை பலமடையச் செய்யும்.

🍁கொடி பசலைக் கீரை 🍁

      வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை 
      நீக்கும்.


🍁மஞ்சள் கரிசலை 🍁

      கல்லீரலை பல மாக்கும்.   
      காமாலையை விலக்கும்.

🍁குப்பை கீரை 🍁

      பசியைத் தூண்டும். வீக்கம்
      வத்தவைக்கும்.

🍁அரைக்கீரை 🍁

     ஆண்மை பெருக்கும்.

🍁புளியங்கீரை 🍁

     சோகையை விலக்கும். கண் நோய்
     சரியாக்கும்.

🍁பிண்ணாக்கு கீரை 🍁

     வெட்டையை, நீர் கடுப்பை நீக்கும்.

🍁பரட்டைக் கீரை 🍁

     பித்தம், கபம், நோய்களை விலக்கும்.

🍁பொன்னாங்கன்னி கீரை🍁

     மேனி அழகையும், கண் ஒளியை
     அதிகரிக்கும்.

🍁சுக்கா கீரை 🍁

     ரத்த அழுத்தத்தை சீர் செய்யும்.
    சிரங்கு மூலத்தை போக்கும்.

🍁வெள்ளை கரிசலைக்கீரை 🍁

      ரத்த சோகையை நீக்கும்.

🍁முருங்கைக் கீரை 🍁

     நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம்
     பெறும்.

🍁வல்லாரை 🍁

     மூளைக்கு பலம் தரும்.

🍁முடக்கத்தான் கீரை 🍁

     கை, கால் முடக்கம் நீக்கும். வாயு
     விலகும்.

🍁புண்ணக் கீரை 🍁

     சிரங்கும், சீதளமும் விலக்கும்.

🍁புதினாக் கீரை 🍁

      ரத்தம் சுத்தி செய்யும். அஜீரணம்
     அகற்றும்.

🍁நஞ்சு முண்டான் கீரை 🍁

      விஷம் முறிக்கும்.

 🍁தும்பை 🍁

     அசதி, சோம்பல் நீக்கும்.

🍁கல்யாண முருங்கை கீரை 🍁

     சளி, இருமலை துளைத்தெறியும்.

🍁முள்ளங்கி கீரை 🍁

     நீரடைப்பு நீக்கும்.

🍁பருப்பு கீரை 🍁

     பித்தம் விலக்கும். உடல் சூட்டை
     தணிக்கும்.

🍁புளிச்ச கீரை 🍁

     கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண்
     நோயை விலக்கும். ஆண்மை பலம்
      தரும்.

🍁மணலிக்கீரை 🍁

     வாதத்தை விலக்கும். கபத்தை 
     கரைக்கும்.

🍁மணத்தக்காளி கீரை 🍁

      வாய், வயிற்றுப்புண் குணமாக்கும்.
      தேமல் அகலும்.

🍁முளைக் கீரை 🍁

     பசியை ஏற்படுத்தும். நரம்பு 
     பலமடையும்.

🍁சக்கரவர்த்தி கீரை 🍁

     தாது விருத்தியாகும்.

🍁வெந்தயக் கீரை 🍁

     மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல்,   
     கல்லீரலை பலமாக்கும். வாத, காச
      நோய்களை விலக்கும்.

🍁தூதுவளை🍁

     ஆண்மை தரும் சரும நோய் விலக்கும்.   
     சளி நீக்கும்.

🍁தவசிக் கீரை 🍁

     இருமலை போக்கும்.

🍁சாணக் கீரை 🍁

     காயம் ஆற்றும்.

🍁வெள்ளைக் கீரை 🍁

     தாய்ப்பாலை பெருக்கும்.

🍁விழுதிக் கீரை 🍁

     பசியைத் தூண்டும்.

🍁கொடி காசினி 🍁

     பித்தம் தணிக்கும்.

🍁துயிளிக் கீரை 🍁

     வெள்ளை வெட்டை விலக்கும்.


🍁துத்திக் கீரை 🍁

     வாய், வயிற்றுப்புண் அகற்றும்.     
     வெள்ளை மூலம் விலக்கும்.

🍁கார கொட்டிக்கீரை 🍁

       மூலநோயை போக்கும். சீதபேதியை       
        நிறுத்தும்.

🍁மூக்கு தட்டை கீரை 🍁

      சளியை அகற்றும்.

🍁நருதாளி கீரை🍁

      ஆண்மையை பெருக்கும். வாய்ப்புண்         
      அகற்றும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459