மாஸ்கோ: உலக அளவிலான கொரோனா பாதிப்பில் இத்தாலி பிரிட்டன் நாடுகளை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு ரஷ்யா முன்னேறி உள்ளது.
அந்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 11,656 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு 94 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 2009 ஆக அதிகரித்து உள்ளது. பாதிக்கப்பட்டோர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அந்நாட்டின் தலைநகரான மாஸ்கோவை சேர்ந்தவர்கள்.
மாஸ்கோவில் மட்டும் 1 லட்சத்து 15 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு நிலவரம் குறித்து அதிபர் புடின் ஆய்வு செய்யவிருந்த நிலையில் ரஷ்யா கொரோனா பாதிப்பில் உலக அளவில் 3ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
ரஷ்யாவில் இதுவரை மொத்தம் 56 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.