New
ஈரோடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மையங்கள் 3,684 இல் இருந்து 12,674 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் கரோனோ பாதிப்பால் இறப்பு குறைவான மாநிலமாக உள்ளதற்கு முதல்வரின் நடவடிக்கைகள் தான் காரணம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு எளிமையான வழிகாட்டுதலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மற்ற மாநிலங்களில் தேர்வுகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவடைந்துள்ளது.
முதல்வரின் தலைமையில் ஆலோசனை பெற்று எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வியாழக்கிழமை மாலை அறிவிப்பு வெளியிடப்படும்.
பத்தாம் வகுப்பு தேர்வு மையங்கள் 3,684 இல் இருந்து 12,674 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அச்சமின்றி அந்தந்த பகுதிகளிலேயே தேர்வு எழுதலாம் என்று அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
No comments:
Post a Comment