சிறிய கார்களில் 2 பேரும், இன்னோவா போன்ற பெரிய கார்களில் 3 பேரும் பயணிக்கலாம் என 25 மாவட்டங்களுக்கு மட்டும் லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
Lockdown relaxation has been announced for only 25 counties, with 2 of the smaller cars and 3 of the larger cars like the Innova traveling.
மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகப்பட்சமாக 20 பேர் மட்டுமே பயணிக்கலாம் என்றும் வேன்களில் 7 பேருக்கு மேல் பயணம் செய்யக் கூடாது
எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே கார் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வோர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகளில் 20 பேர் மட்டும் பயணிக்கலாம் என்ற அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் நாளை முதல் 50 % பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாக்டவுனில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளை முறையாக பயன்படுத்துமாறும் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கும் மட்டும் வெளியில் சென்று வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.