தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. சென்னை:
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
இதற்கிடையில், நேற்றிய நிலவரப்படி தமிழகத்தில் 2,757 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், பலியானோர் எண்ணிக்கை 29 ஆக இருந்தது.
இதற்கிடையில், நேற்றிய நிலவரப்படி தமிழகத்தில் 2,757 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், பலியானோர் எண்ணிக்கை 29 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 379 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது