பத்தாம் வகுப்பு மாணவர்கள் இதுவரை தொடர்ச்சியாக படித்து ஆண்டு பொது தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர்களும் தொடர்ச்சியாக பயிற்சி அளித்து வந்தனர்
தற்போதைய கொரோனா சூழ்நிலையால் மாணவர்கள் பயிற்சி இல்லாமல் இரண்டு மாதங்கள் வீட்டிலேயே உள்ளனர்.
நன்கு படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு பிரச்சினையில்லை .
ஆனால் மீத்திறன் குறைந்த மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்தால் கூட அவர்கள் 35 மதிப்பெண்கள் தான் எடுப்பார்கள்.
தற்போது இரண்டு மாதங்கள் அவர்கள் எதையுமே படித்திருக்க மாட்டார்கள் எனவே இந்த ஆண்டு மட்டும் தேர்ச்சி மதிப்பெண் 25 ஆக குறைத்து தேர்வு நடத்த வேண்டும் என பதவி உயர்வு பெற்ற பட்டதாரி சங்கத்தின் சார்பாக கோரிக்கை முன் வைக்கிறோம்.
மேலும் பதினோராம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புக்கு ஏற்கனவே 25 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்ற நிலை உள்ளது .
இதிலும் அறிவியல் பாடங்களுக்கு 15 மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி என்ற நிலை 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நடைமுறையில் உள்ளது .
எனவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் 25 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்ற நிலையை ஏற்படுத்தி தரவேண்டும் என இக் கோரிக்கையை முன்வைக்கிறோம்.
இங்கனம்
ரமேஷ் மாவட்ட தலைவர் பாபு மாவட்ட செயலாளர் பெலிக்ஸ் லியோ மேத்தா மாவட்ட பொருளாளர்
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம்
25 mark vendam sir.5 mark pass mark venumnu korrikkai vaiunga.
ReplyDelete