ஜூன் மாதம் ராசி பலன் 2020 - தனுசுக்கு தன வரவு... மகரத்திற்கு எச்சரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/05/2020

ஜூன் மாதம் ராசி பலன் 2020 - தனுசுக்கு தன வரவு... மகரத்திற்கு எச்சரிக்கை


2020ல் கொரோனா வைரஸ் பீதியால் உலக பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இந்திய பொருளாதாரமும் தடுமாறுகிறது பலருக்கும் வேலையிழப்பு வருமானமில்லை என பிரச்சினையில் சிக்கியிருக்க பிறக்கப் போகும் ஜூன் மாதத்தில் தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமை, ஆரோக்கியம் குடும்ப நிலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். ஜூன் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார், மிதுனம் ராசியில் ராகு, ஆட்சி பெற்ற புதன், தனுசு ராசியில் கேது மகரம் ராசியில் சனி வக்ரம், குரு வக்ரம், கும்பம் ராசியில் செவ்வாய், கன்னி ராசியில் சந்திரன் என மாதம் ஆரம்பிக்கிறது.ஜூன் 14ஆம் தேதி சூரியன் மிதுனம் ராசிக்கு மாறி ராகு, புதனோடு இணைகிறார். 18ஆம் தேதி செவ்வாய் மீனம் ராசிக்கு நகர்கிறார். மிதுனம் ராசியில் உள்ள புதன் வக்ர ஆரம்பமாகிறது.
ஜூன் 25ஆம் தேதி சுக்கிரன் வக்ரம் முடிகிறது. ஜூன் 29ஆம் தேதி தனுசு ராசியில் கேது உடன் இணைகிறார் குரு பகவான். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம். ஜூன் மாதம் ராசி பலன் 2020 - துலாம் சவால்களை சமாளிப்பீர்கள் விருச்சிகத்திற்கு எச்சரிக்கைபிரச்சினைகள் தீரும்குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரைக்கும் பண வருமானம் சுமாராக இருக்கும். கடன் பிரச்சினை அதிகமாக இருக்கும். உங்க ராசி அதிபதி குரு வக்ரமடைந்து வக்ரமடைந்த சனியோடு சேர்ந்திருக்கிறார். இதன் மூலம் உங்களுக்கு சில பிரச்சினைகள் வந்தாலும் அது எளிதில் சரியாகும். வங்கிக்கடன் கிடைக்கும். 14ஆம் தேதி வரை ஆறாம் வீட்டில் இருந்த சூரியன் மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு நகர்கிறார். பேச்சில் கவனமாக இருங்க சிக்கல்கள் வரலாம். அரசு வேலை, அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் வரும். மாணவர்களுக்கு படிப்பில் உற்சாகம் அதிகரிக்கும் தன்னம்பிக்கை கூடும்.உதவிகள் தேடி வரும்கேது உங்க ராசியில் இருக்கிறார். ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும். செவ்வாயின் சாதகமான சஞ்சாரத்தினால் உடன் பிறந்தவர்கள் உறவுகளின் உதவி கிடைக்கும். ஆறாம் வீட்டில் சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார். ஆறுக்குடையவன் ஆறாம் வீட்டில் வக்ரமடைவது நல்லது. நீண்ட நாள் நிறைவேறாமல் இருந்த ஆசை நிறைவேறும். பிறரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். அதே நேரத்தில் விரைய செலவுகள் ஏற்படும். மாத இறுதியில் பணவரவு கிடைக்கும். பிறர் செய்யும் உதவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மனைவி மக்கள் மூலம் உதவி கிடைக்கும். பணம் கிடைக்கிறதே என்பதற்காக அதிகமாக கடன் வாங்காதீங்க.வேலையில் சிக்கல் நீங்கும்சகோதர சகோதரிகளிடம் சந்தோஷமாக பேசுங்க. அவர்களின் உதவி கிடைக்கும். உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் செவ்வாயின் நகர்வினால் வீடு கட்டுவதற்கும் மனை வாங்குதற்கும் யோகம் வரும். வேலை தொழிலில் இருந்த தேக்கநிலையும் பிரச்சினையும் மாறும். இந்த மாதம் எந்த புதிய வேலைக்கும் மாறாதீங்க. கணவன் மனைவி இடையே நிறைய பிரச்சினைகள் வரலாம் சூடான பேச்சுவார்த்தைகள் பிரச்சினையை தரலாம்
. மாத இறுதியில் பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் அதிகமாகும்.முதலீடுகள் லாபமாகும்சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதத்தில் உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். ரொம்ப சாதகமாக இருக்கும். பண செலவு அதிகமாக இருக்கே என்று நீங்க நினைக்கலாம். சேர்த்து வைத்த பணமெல்லாம் கரையுதே என்று மனதளவில் ரொம்ப சோர்வா ஃபீல் பண்ணுவீங்க. கவலைப்படாதீங்க உங்க முதலீடுகள் லாபமாக மாறும் வரைக்கும் ரொம்ப பொறுமையாக இருங்க. குடும்ப உறுப்பினர்கள் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க அப்பத்தான் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.மருத்துவ செலவுகள்சுக்கிரன் சூரியனோடு மாத முற்பகுதியில் இணைந்திருப்பதால் பிள்ளைகளால் செலவுகள் வரும். வேலையில் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். மாத பிற்பகுதியில் 14ஆம் தேதிக்கு மேல் சூரியன் ஆறாம் வீட்டில் புதன் ராகு உடன் இணைகிறார். எட்டுக்குடைய சூரியன் ஆறாம் வீட்டில் மறைவது பாதிப்பில்லை. உடல் ரீதியாக சில பிரச்சினைகள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க
. சிலருக்கு மன உளைச்சல் வரலாம் இந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடிய நேரம் வரும். குரு உங்க ராசியில் நீசமடைந்திருக்கிறார். குரு வக்ரமடைவதால் பிரச்சினையில்லை. ஆன்மீகம், சேவைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான காலகட்டம்.விழிப்புணர்வு அவசியம்செவ்வாய் பகவான் உங்களுக்கு ரொம்ப நல்லதை செய்வார். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். பயணங்கள் போகும் போது கவனமாக இருங்க. மற்றவர்களின் மாணவர்களுக்கு படிப்பில் சில பிரச்சினைகள் வரலாம். கவனமாக படிங்க. வீட்டில் பெரியவர்களின் உதவிகளை கேட்டும் ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டும் முடிவெடுப்பது ரொம்ப நல்லது. ஜூன் மாதத்தில் கவனமாகவும் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459