கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளுக்குள் இந்தியா - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/05/2020

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளுக்குள் இந்தியா


இந்தியாவில் திங்கள்கிழமை நிலவரப்படி 1 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் கடைசி இடத்தில் இருந்த ஈரானை பின்னுக்குத் தள்ளி, இந்தியா 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஈரானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35  ஆயிரமாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 6,977 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கரோனா பாதிப்பு பட்டியலில் இந்தியா ஈரானை பின்னுக்குத் தள்ளி 10வது இடத்தில் உள்ளது.
அதே சமயம்,  பலி எண்ணிக்கையில் இந்தியா 4000 பலி எண்ணிக்கையோடு உலக அளவில் 15வது இடத்தில் உள்ளது
. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கரோனாவுக்கு 4,024 பேர் பலியாகியுள்ளனர்.
உலகிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு 16 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 99,300 ஆக உள்ளது. 
இதையடுத்து பிரேஸில், ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி நாடுகளின் வரிசையில் 10வது இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459