சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதி இல்லாததால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் தேர்வு நடத்தினால் மாணவர்கள், ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.