10-ம் வகுப்பு தேர்வை தள்ளிப்போட்டால் மாணவர்களின் எதிர்காலம் தடைபடும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/05/2020

10-ம் வகுப்பு தேர்வை தள்ளிப்போட்டால் மாணவர்களின் எதிர்காலம் தடைபடும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரெயில், விமானம் இயக்கக்கூடாது என்று பிரதமரிடம் கூறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனுமதி அளித்தது ஏன்? என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 10-ம் வகுப்பு தேர்வை தள்ளிப்போடுவது மாணவர்களின் எதிர்காலத்துக்கு தடையாக இருக்கும்.
அதனால்தான் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மலைப்பகுதி உள்பட எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களை தேர்வு மையத்துக்கு அழைத்து வர பஸ் வசதி செய்யப்படும். மாணவர்களின் வீடுகளில் இருந்து அதிகபட்சமாக 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள்தான் தேர்வு மையம் அமைக்கப்படும். அனைவரின் கருத்துகளை அறிந்தேதான் பள்ளிக்கல்வித்துறை இப்பணிகளை மேற்கொண்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்வை போலவே விடுபட்ட அனைத்து தேர்வுகளும் முறையான கட்டுப்பாடுகளுடன் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459