ஈரோடு: வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பது குறித்து வருகின்ற 19 ஆம் தேதி தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
தமிழகம் அரசின் நடவடிக்கைகளால் கரோனா இறப்பு எண்ணிக்கையில் குறைந்த மாநிலமாக உள்ளது. ஈரோடு மாவட்டம் மக்களின் ஒத்துழைப்பால் கடந்த 29 நாட்களாக புதிதாக கரோனா தொற்று எதுவும் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு யுடியூப்,
கல்வி சேனல் ஆகியவற்றின் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன 1 ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்ற 19 ஆம் தேதி இது போன்ற பிரச்னைகளை தீர்க்க என்ன நடவடிக்கை எடுப்பது என்று குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும்.
. மேலும் ஆசிரியர்களுக்கும் இருவார பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முடித்ததும் மாணவர்களுக்கு இதுவரை நடத்தப்பட்ட பயிற்சியின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். இதில் ஏறக்குறைய 3,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை தேர்வு செய்துள்ள 10 கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார்.