கொரோனா Red Zone தமிழ்நாடுதான் நம்பர் :1 - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/04/2020

கொரோனா Red Zone தமிழ்நாடுதான் நம்பர் :1


இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவையாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அதிக மாவட்டங்களை ரெட் ஸோன் பகுதிக்குள் கொண்டு வந்ததில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் 20 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 170 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரு மாவட்டம் கூட ஹாட்ஸ்பாட் பகுதிக்குள் வரவில்லை.
இந்தியாவிலுள்ள 1.21 பில்லியன் மக்கள் தொகையில் 453 மில்லியன் மக்கள் இந்த ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்குள் வசிக்கிறார்கள். டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களில் 10 மாவட்டங்களும், மகாராஷ்டிராவில் உள்ள 36 மாவட்டங்களில் 14 மாவட்டங்களிலும், உத்தரப்பிரதேசத்தில் 75 மாவட்டங்களில் 13 மாவட்டங்களும், ராஜஸ்தானில் 33 மாவட்டங்களில் 12 மாவட்டங்களும் ஹாட் ஸ்பாட் பகுதிக்குள் வந்துள்ளன.
ரேபிட் கருவிகள் வந்தாச்சு: கேட்டது எவ்வளோ, கிடைச்சது இவ்வளோ!
இந்த பட்டியலில் ஆந்திராவில் அதிகம் அதிகமாக 90% மக்கள் ஹாட்ஸ்பாட் பகுதிக்குள் வசிக்கிறார்கள். அங்கு 44.3 மில்லியன் மக்கள் ஹாட்ஸ்பாட் பகுதியில் வருகிறார்கள். அந்த மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெல்லியில் 87 சதவீதம் மக்கள் இந்தப் பகுதிகளில் வசிக்கின்றனர். அதாவது 14.5 மில்லியன் மக்கள் மக்கள் இந்த பகுதியில் குடியிருக்கின்றனர். மகாராஷ்டிராவில் 60 சதவீதம் மக்கள் இப் பகுதியில் வசிக்கிறார்கள். 66.9 மில்லியன் மக்கள் இந்த மாநிலத்தில் இந்த ஹாட் ஸ்பாட் எல்லைக்குள் வருகின்றனர். அதிலும் மும்பை, மும்பை புறநகர், தானே ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் 20 மில்லியன் மக்கள் இதற்குள் வருகின்றனர். ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு என்பது இந்த ரெட் ஸோன் பகுதிக்குள் வருபவர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் ஆந்திராவில் 90 %, டெல்லியில் 87 %, தமிழ்நாட்டில் 80 %, தெலங்கானாவில் 66%, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 63 %, மகாராஷ்டிரா 60 %, இமாச்சல பிரதேசத்தில் 53 %, ஜம்மு, காஷ்மீர் 53 %, லடாக்கில் 51 % பேர் இந்த எல்லைக்குள் வருகின்றனர்.
பீகார், ஜார்கண்ட், ஒடிசா, அசாம், மத்திய பிரதேசம்
உள்ளிட்ட மாநிலங்களில் 20 சதவீதத்துக்கும் குறைவான பகுதிகளே ஹாட்ஸ்பாட் பகுதிக்குள் வருகின்றன.
கொரோனா: தமிழ்நாடு இன்றைய நிலவரம் இதுதான்!
கோவா, அசாம் தவிர பிற வட கிழக்கு மாநிலங்கள் என 8 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் ஹாட் ஸ்பாட் பகுதிகள் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 நாள்கள் புதிதாக எந்தவித பாதிப்பும் இல்லையெனில் மாநிலங்கள் க்ரீன் ஸோன் பகுதிக்கு மாற்றப்படும். நான்கு நாள்களில் நிலைமை இரட்டிப்பாகும் மாநிலங்கள் ரெட் ஸோன் பகுதிக்குள் கொண்டுவரப்படுகின்றன.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுபாஷ் சலுங்கே இது குறித்து கூறும்போது, “அரசு இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பது வரவேற்கத்தக்கது. இதன் முக்கியத்துவத்தை தற்போது நேரடியாக உணர்ந்து கொள்ளமுடியாவிட்டாலும் இனிவரும் காலங்களில் அதன் மதிப்பு தெரியவரும்” எனக் கூறியுள்ளார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459