"NO WATER...NO CELLPHONE..."! தமிழகத்தில் கொரோனா வார்டுகள் எப்படி செயல்படுகின்றன? - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/04/2020

"NO WATER...NO CELLPHONE..."! தமிழகத்தில் கொரோனா வார்டுகள் எப்படி செயல்படுகின்றன?


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மார்ச் 20-ம் தேதி வரை தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதன்பின்னர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது.


கொரோனா வார்டு
31-ம் தேதி வரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மட்டும் (1.4.2020) 110 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில் “டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 1,131 பேர் தமிழகம் வந்துள்ளனர். அவர்களில் 515 பேர் வரை கண்டறியப்பட்டுள்ளனர்.
மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது” என்றார்.
சென்னையைப் பொறுத்தவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனாவுக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459