Network சிக்கலில் இருந்து விடுபட லேட்டஸ்ட் வழி... - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/04/2020

Network சிக்கலில் இருந்து விடுபட லேட்டஸ்ட் வழி...


இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்துடன் மூன்று வாரங்களுக்கும் மேலாகவிட்டது. இந்த இக்கட்டான லாக்டவுன் எப்பொழுது முடியுமென்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியாக மீண்டும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பெரிதும் உறுதுணையாக அவர்களின் ஸ்மார்ட்போன் மட்டுமே இருக்கிறது. உலகத்துடன் இணைந்திருக்க அனைவரும் இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட்போனையே நம்பியுள்ளனர் என்பதே உண்மை.


தரமான நெட்வொர்க் கிடைப்பதில் சிக்கல்

தரமான நெட்வொர்க் கிடைப்பதில் சிக்கல்

ஊரடங்கு காரணத்தினால் மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதினால் இனைய சேவையின் பயன்படு அதிகரித்துள்ளது. இதனால் நெட்வொர்க் டிராபிக் ஏற்பட்டு இன்னமும் பல பகுதிகளில் தரமான நெட்வொர்க் கிடைப்பது என்பது பெரும் சிக்கலாகவே இருக்கிறது. ஆனால், இந்த நிலையைச் சமாளிக்க உங்களுக்கு 2020ம் ஆண்டின் புதிய சேவையான வைஃபை காலிங் அம்சம் கைகொடுக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.


ஏர்டெல் மற்றும் ஜியோ வைஃபை காலிங் சேவை

ஏர்டெல் மற்றும் ஜியோ வைஃபை காலிங் சேவை

ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டும் சமீபத்தில் இந்தியாவில், அதன் வைஃபை காலிங் சேவையை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்து அதை இன்னும் பரவலாக விரிவுபடுத்தி வருகிறது. வைஃபை மூலம் குரல் அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கும் இந்த சேவை ஆரம்பத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ஹோம் பிராட்பேண்டிற்கு மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..



வைஃபை வாய்ஸ் காலிங் என்றால் என்ன?

வைஃபை வாய்ஸ் காலிங் என்றால் என்ன?

உங்கள் மொபைலில் உள்ள சிம் நெட்வொர்க்கை பயன்படுத்தி வழக்கம்போல் நீங்கள் அழைப்புகளை மேற்கொள்ளும் விதம் போல் இல்லாமல், உங்கள் மொபைல் சாதனத்தை வைஃபை நெட்வொர்க் உடன் இணைத்து அதன் மூலம் குரல் அழைப்பை மேற்கொண்டு மற்றவர்களுடன் பேசிக்கொள்வதே வைஃபை வாய்ஸ் காலிங் முறையாகும். உங்களிடம் இருக்கும் வைஃபை டேட்டா இருப்பை பயன்படுத்தி நீங்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம், டாக்டைம் கட்டணம் இதற்கு கிடையாது.


ஏர்டெல் வைஃபை காலிங்

ஏர்டெல் வைஃபை காலிங்

ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது எந்தவொரு வைஃபை நெட்வொர்க் மூலமாகவும் இந்த சேவையை அணுக அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய சேவை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உங்கள் போனும் உள்ளதா என்று செக் செய்துகொள்ளுங்கள்.


100-க்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களுக்கு வைஃபை காலிங் சேவை

100-க்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களுக்கு வைஃபை காலிங் சேவை

இதற்கு முன்பு சுமார் 20-க்கும் குறைவான ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த வைஃபை காலிங் சேவை கிடைக்கும்படி ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்தது. தற்பொழுது இந்த சேவையை விரிவுபடுத்தி வருவதனால் கூடுதலாக தற்போது 16 பிராண்டுகளில் 100-க்கும் அதிகமான ஸ்மார்ட்போன் மடல்களுக்கு வைஃபை காலிங் சேவை கிடைக்கும்படி உருவாக்கியுள்ளது.



வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் ஆப்பிள் ஐபோன்கள்

வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் ஆப்பிள் ஐபோன்கள்

  • ஐபோன் எக்ஸ்ஆர்
  • ஐபோன் 6 எஸ்
  • ஐபோன் 6 எஸ் பிளஸ்
  • ஐபோன் 7
  • ஐபோன் 7 பிளஸ்
  • ஐபோன் எஸ்இ
  • ஐபோன் 8
  • ஐபோன் 8 பிளஸ்
  • ஐபோன் எக்ஸ்
  • ஐபோன் எக்ஸ் மேக்ஸ்
  • ஐபோன் 11
  • ஐபோன் 11 ப்ரோ
  • ஐபோன் SE 2020


வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்

வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்

  • ஒன்பிளஸ் 6
  • ஒன்பிளஸ் 6 டி
  • ஒன்பிளஸ் 7
  • ஒன்பிளஸ் 7 ப்ரோ
  • ஒன்பிளஸ் 7 டி
  • ஒன்பிளஸ் 7 டி ப்ரோ


வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

  • சாம்சங் கேலக்ஸி எஸ் 10 சீரிஸ்
  • சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்
  • சாம்சங் கேலக்ஸி எஸ் 10+
  • சாம்சங் கேலக்ஸி எஸ் 10 இ
  • சாம்சங் கேலக்ஸி எம் 20
  • சாம்சங் கேலக்ஸி ஜே 6
  • சாம்சங் கேலக்ஸி ஆன் 6
  • சாம்சங் கேலக்ஸி எம் 30எஸ்
  • சாம்சங் கேலக்ஸி ஏ 10 எஸ்
  • சாம்சங் கேலக்ஸி ஏ 50 எஸ்
  • சாம்சங் கேலக்ஸி நோட் 9
  • சாம்சங் கேலக்ஸி எஸ் 9 சீரிஸ்


வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்

வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்

  • போக்கோ எஃப் 1
  • ரெட்மி 8
  • ரெட்மி 8A
  • ரெட்மி கே 20
  • ரெட்மி கே 20 ப்ரோ
  • ரெட்மி 7A
  • ரெட்மி நோட் 7 ப்ரோ
  • ரெட்மி ஒய் 3
  • ரெட்மி 7



வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் நோக்கியா போன்கள்

வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் நோக்கியா போன்கள்

  • நோக்கியா 6.1
  • நோக்கியா 6.1 பிளஸ்
  • நோக்கியா 7 பிளஸ்
  • நோக்கியா 7.1
  • நோக்கியா 8.1
  • நோக்கியா 8 சிரோக்கோ
  • நோக்கியா 9பியூர் வியூ


வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் ஆசஸ் & விவோ ஸ்மார்ட்போன்கள்

வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் ஆசஸ் & விவோ ஸ்மார்ட்போன்கள்

  • விவோ வி 15 ப்ரோ
  • விவோ ஒய் 17
  • விவோ யு 20
  • விவோ எஸ் 1 ப்ரோ
  • ஆசஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம் 1
  • ஆசஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம் 2


வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் பானாசோனிக் ஸ்மார்ட்போன்கள்

வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் பானாசோனிக் ஸ்மார்ட்போன்கள்

  • பானாசோனிக் பி 100
  • பானாசோனிக் எலுகுரே 700
  • பானாசோனிக் பி 95
  • பானாசோனிக் பி 85 என்எக்ஸ்டி


வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள்

வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள்

  • இன்ஃபினிக்ஸ் ஹாட் 8
  • இன்ஃபினிக்ஸ் எஸ் 5 லைட்
  • இன்ஃபினிக்ஸ் எஸ் 5
  • இன்ஃபினிக்ஸ் நோட் 4
  • இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 2
  • இன்ஃபினிக்ஸ் நோட் 5
  • இன்ஃபினிக்ஸ் எஸ் 4
  • இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 3
  • இன்ஃபினிக்ஸ் ஹாட் 7


வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் கூல்பேட் ஸ்மார்ட்போன்கள்

வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் கூல்பேட் ஸ்மார்ட்போன்கள்

  • கூல்பேட் கூல் 3
  • கூல்பேட் கூல் 5
  • கூல்பேட் நோட் 5
  • கூல்பேட் மெகா 5 சி
  • கூல்பேட் நோட் 5 லைட்


வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் மற்ற ஸ்மார்ட்போன்கள்

வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் மற்ற ஸ்மார்ட்போன்கள்

  • ஒப்போ எஃப் 15
  • ஹானர் 8X
  • ஹானர் 10 லைட்
  • ஹானர் 20i
  • ஹவாய் ஒய் 9 பிரைம்
  • எல்ஜி ஜி 8 எக்ஸ்
  • எல்ஜி ஜி 8 எஸ்
  • எல்ஜி க்யூ 60
  • எல்ஜி வி 40
  • எல்ஜி ஜி 7
  • iQOO 3 (4G)
  • iQOO 3 (5G)
  • மைக்ரோமேக்ஸ் இன்பினிட்டி N12
  • மைக்ரோமேக்ஸ் N8216
  • மைக்ரோமேக்ஸ் B5
  • ஜியோனி எஃப் 205 ப்ரோ
  • ஜியோனி எஃப் 103 ப்ரோ
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459