NCERT புத்தகங்களை அந்தந்த விற்பனை நிலையங்களில் இருந்து மாணவர்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் என்சிஇஆர்டி (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது. சிபி எஸ் இ என்னும் மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்க ளில் நடந்தது.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால் சில தேர்வுகள் நடக்காமல் ஒத்தி வைக்கப்பட்டன.
அதன்படி சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கு மொத்தம் 12 பாடங்களுக்கான தேர் வுகள் இன்னும் நடக்க வில்லை .) இந்நிலையில் ஊரடங்கு முடிந்து சகஜ நிலை திரும்பியவுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேற்கண்ட 12 தேர்வுகளும் நடக்கும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல நீட் மற்றும் ஜெஇஇ போன்ற போட்டித் தேர் வுகள் நடப்பது ஒத்திப் போகலாம் என்ற நிலை இருந்தது
ஏற்கெனவே மே மாத இறுதி வாரத்தில் இந்த தேர்வுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் கொரோனா பாதிபபை அடுத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகள் ஊரடங்கு முடிந்து சகஜ நிலை திரும்பிய பின்னரே நடக்கும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே என் சிஇஆர்டி அச்சிட்டுள்ள பாடப்புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் உள்ள விற்பனை நிலையங்க ளில் இந்த புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே என் சிஇஆர்டி அச்சிட்டுள்ள பாடப்புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் உள்ள விற்பனை நிலையங்க ளில் இந்த புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது அத்தியாவசிய தேவை என்ற அடிப்படையில் வைக்கப்பட்டு, விற்பனை நிலையங்களில் புத்தகம் விற்க என் சிஇஆர்டி ஏற்பாடு செய்துள்ளது. அதனால் மாணவர்கள் தயக் கம் இல்லாமல் விற்பனை நிலையங்களில் இருந்து பாடப்புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.