கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்களை மட்டும் பாதிக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், அரசு ஊழியர்களின் சலுகைகளையும் குறைத்து வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ரத்து,
எம்.பி.க்களின் சம்பளம், வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எம்.பி.க்களின் சம்பளம், வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசைத் தொடர்ந்து தமிழக அரசும் வட்டி விகிதத்தை 7.9 சதவிகிதத்தில் இருந்து 7.1 ஆக குறைத்துள்ளது. அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு மூன்று மாதத்திற்கு பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.