கர்ப்பிணிகளுக்கு கபசுர குடிநீர் அளிக்க வேண்டாம் என்று கோவை அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் சிவசங்கரி தெரிவித்துள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்திக்காக தமிழகத்தில் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன்மூலம், கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ளமுடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பேசிய கோவை அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் சிவசங்கரி, சளி, இருமல்,
காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், காலை மற்றும் மாலை இரண்டு வேளையும், எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் ஒருவேளையும், சர்க்கரை வியாதி உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள், உணவுக்கு பின்னும் கபசுர குடிநீரை அருந்தலாம் என தெரிவித்துள்ளார். ஆனால் பல மூலிகைப் பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படுவதால் கர்ப்பிணிகள் இதனை குடிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.