கொரோனா பரவத் தொடங்கியதுமே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனாவக் கட்டுப்படுத்த முதல்கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் மே3ம் தேதி வரை 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே
வெளியில் வர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனை மீறி தேவையில்லாமல் நடமாடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் தன்னை ட்யூசன் அனுப்பியதால் ஆத்திரம் அடைந்த சிறுவன் ட்யூசன் ஆசிரியர் குறித்து போலீசாரிடம் தெரிவித்து, போலீசாரை டியூசன் நடத்தும் ஆசிரியரின் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டான்.

பஞ்சாப் மாநிலம், படாலாவில் ஊரடங்கை மீறி இரு சிறுவர்களை ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். நடுவழியில் போலீசாரிடம் சிக்கிய அந்த நபர், எதோ சமாளித்து விளக்கம் அளித்துள்ளார். ஆனால் குறுக்கிட்டு பேசிய 6வயது சிறுவன் தன்னை ட்யூசனுக்கு அனுப்பவதாக புகார் அளித்துள்ளான்.
மேலும் தன்னுடைய ட்யூசன் ஆசிரியர் வீட்டிற்கே போலீசாரை அழைத்துச் சென்றுவிட்டான். வாசலில் காத்திருந்த போலீசார் டியூசன் ஆசிரியர் வந்ததும் அறிவுரை கூறி விவகாரத்தை முடித்து வைத்தனர். ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் நடமாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.