இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த நாவல் பழத்தின் கொட்டை சர்க்கரை நோயாளிகளுக்கான அருமருந்தாகப் பயன்படுகிறது.
அத்திப் பழத்தில் உள்ள மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இன்சுலின் செயல்பாட்டையும் சரி செய்கிறது. இதனால் டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு அத்திப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.
அதனால் மற்ற பழங்களை சாப்பிடும் முன்பு யோசிப்பதைப் போல சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடும் போது யோசிக்கத் தேவையில்லை. அதிக அளவில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
அன்னாசிப்பழம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்று தான். இதில் நிறைய ஆன்டி- வைரல்
, ஆன்டி - பாக்டீரியல் மற்றும் ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகள் நிறைந்திருப்பதால் கொஞ்சமும் யோசிக்காமல் சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை கூடு எடுத்துக் கொள்ளலாம்
மிக அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களில் ஒன்று தான் ஆரஞ்சு பழமும் கூட.
அதனால் தினமும் கூட தாராளமாக சர்க்கரை நோயாளிகள் இந்த ஆரஞ்சுப் பழத்தை சாப்பிட்டு வரலாம். ஆரஞ்சுப் பழத்தில் பல வகைகள் வந்துவிட்டன. ஆனால் நாட்டு ஆரஞ்சு, கமலா ஆரஞ்சுப் பழங்களை வாங்கி உண்பது இன்னும் சிறந்தது.
இந்த சிவப்பு முத்துக்கள அடங்கிய அற்புதக் கனி சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதோடு உடலில் உள்ள ரத்தத்தைச் சுத்தப்படுத்தி கழிவுகளை வெளியேற்றும்.
புதிய ரத்த உற்பத்தியை அதிகப்படுத்தும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் மிக அதிக அளவில் இந்த மாதுளைப் பழத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு வரலாம்.
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் கொய்யாப்பழத்திற்கு இணை கொய்யா தான். சர்க்கரை நோய் உள்ளவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயமே மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தான். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் கொய்யாப் பழத்திற்கு சிறந்த பங்குண்டு. அதோடு கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு குளுக்கோஸ் மட்டுமே உள்ளது. அதிக அளவில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்திருக்கிறது. அதிக நார்ச்சத்து கொண்ட பழங்களில் கொய்யாவும் ஒன்று.