கொரோனாவிலிருந்து நார்வே நாடு மீண்டது எப்படி? - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/04/2020

கொரோனாவிலிருந்து நார்வே நாடு மீண்டது எப்படி?


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. உலகளவில் தற்போது வரை 12 லட்சத்து 92 ஆயிரத்து 564 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 71 ஆயிரத்தை நெருங்குகிறது. இத்தாலியில் 16 ஆயிரத்து 500 பேரும், ஸ்பெயினில் 13 ஆயிரத்து 55 பேரும் பலியாகியுள்ளனர்.
உலக வல்லரசு நாடுகளே கொரோனாவின் பிடியில் இருந்து தப்பிக்க திணறும் நிலையில் 5760 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். 76 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற நிலையில் இருக்கும் நார்வே, கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளோம் என மார்தட்டுகிறது.
இதுகுறித்து விரிவாக பார்ப்போம்…..
பிப்ரவரி 26-ந்தேதி நார்வே நாட்டில் முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட நார்வே அரசு கொரோனா வைரஸ் தொற்றை
உடனடியாக கண்டறியும் வகையில் நாடு முழுவதும் 20 பரிசோதனை மையங்களை உருவாக்கியது. அத்துடன் மார்ச் 12-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. நோயாளிகளை கண்டறிந்து உடனடியாக அவர்களை தனிப்படுத்தும் பணியில் இறங்கியது.
அவர்களின் பரிசோதனை மிகப்பெரிய அளவில் இருந்தது. அமெரிக்காவில் தற்போது 10 லட்சம் பேருக்கு 18 ஆயிரத்து 996 பேருக்கு பரிசோதனை என்ற அளவிலேயே பரிசோதனை இருக்கும் நிலையில் நார்வேயில்
ஒரு லட்சத்து ஆயிரத்து 986 என்ற விகிதத்தில் பரிசோதனை இருந்தது. அமெரிக்காவை விட ஐந்து மடங்கு வேகமாக நோயாளிகளை கண்டறிந்து உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கான சிகிச்சையை ஆரம்பித்தன. இதனால் நோய் அறிகுறி தென்பட்ட நிலையிலேயே அவர்களை கண்டறிந்து சமூக பரவலை எளிதாக கட்டுப்படுத்தின.
இதனால் கொரோனா வைரஸ் பரவலின் வீரியத்தை கட்டுப்படுத்தியது. இதன் காரணமாக ஏப்ரல் 2-ந்தேதியில்
இருந்து புது நோயாளிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.தற்போதைய நிலையில் புதிதாக 2.5 சதவீதம் பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலி எண்ணிக்கை 0.7 ஆக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு மற்றும் விரைவான பரிசோதனை ஆகியவற்றின் மூலம் விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459