சாலையில் வீசப்பட்ட பணம். கண்டுகொள்ளாத மக்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/04/2020

சாலையில் வீசப்பட்ட பணம். கண்டுகொள்ளாத மக்கள்


இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது
. இந்த வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களில் 4-வது இடத்தில் உள்ளது .
அங்கு இதுவரை 1164 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. 55 பேர் பலியாகி உள்ளனர். மத்திய பிரதேசத்தில் நேற்று ஒரே நாளில் 361 பேர் பாதிக்கப்பட்டனர்.
அங்குள்ள இந்தூர் நகரில் தான் அதிகமான பாதிப்பு இருக்கிறது.
இந்த நிலையில் இந்தூரில் காரில் வேகமாக வந்த சிலர் ரூபாய் நோட்டுகளை சாலையில் அள்ளி வீசி விட்டு சென்றனர். அவை ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகள் ஆகும்.
மொத்தம் 6800 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கிடந்தன
. கொரோனா பீதி காரணமாக அந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க அங்கு நின்ற மக்கள் தயங்கினார்கள்.
ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவலாம் என கருதி அவர்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அங்கு வந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்
. ரூபாய் நோட்டுகளை வீசி சென்றது யார் என்று அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து
வருகிறார்கள்.
சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ரூபாய் நோட்டுகளை விளையாட்டுக்காக வீசினார்களா? அல்லது வேறு ஏதாவது சதியா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459