முழு ஊரடங்கின் போது எவை செயல்படும் தமிழக அரசு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/04/2020

முழு ஊரடங்கின் போது எவை செயல்படும் தமிழக அரசு அறிவிப்பு


சென்னை,
கொரோனாவின் தீவிரம் குறையாததால், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.   சென்னை, கோவை, மதுரையில் 26-ம் தேதி காலை முதல்  29-ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படும்.  சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல்  28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் முழுமையான ஊரடங்கு   தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
*பெட்ரோல் பங்குகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி
*தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும் உணவுக்கு அனுமதி
*ரேஷன் கடைகள், சமையல் கேஸ் ஏஜென்சி, அம்மா உணவகங்கள், ஏ.டி.எம்.கள் வழக்கம் போல் இயங்கும்
*கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிகளுக்கு உட்பட்டு செயல்படும்
*மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் 33% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி
*தலைமைச்செயலகம்,
சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை தேவையான பணியாளர்களுடன் செயல்படும்
*மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி
*பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459