கல்லூரித் தேர்வுகள் எப்போது?: உயர் கல்வித் துறை அறிவிப்பு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/04/2020

கல்லூரித் தேர்வுகள் எப்போது?: உயர் கல்வித் துறை அறிவிப்பு!


2020ஆம் ஆண்டின் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதற்கு முன்னரே கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்டர்னல், செய்முறைத் தேர்வு, பருவத் தேர்வு நடைபெறும் சமயத்தில் கல்லூரிகள் மூடப்பட்டதால் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது
. பருவத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் மாணவர்களிடையே எழுந்தது. அதோடு அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் தேர்வு ரத்து செய்யப்படுமோ என்ற குழப்பமும் உருவானது. இந்நிலையில், தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை, ஜூன் மாதத்தில் தான் கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்திருந்தார். அதன்படி உயர்கல்வி துறை தரப்பில் இன்று (ஏப்ரல் 16) அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டைத் தவிர வெளி மாநிலங்களிலிருந்தும் அயல்நாட்டிலிருந்தும் வந்து தமிழகத்தில் கல்வி பயில்கின்றனர்
. இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் மீண்டும் கல்லூரிகள் துவங்கும்போது, அதாவது அடுத்த பருவத்தின் தொடக்கத்தில் நடைபெறும். அதன்பின்னர் அடுத்த கல்வியாண்டின் வகுப்புகள் தொடங்கும். கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் மீண்டும் திறப்பதற்கான தேதி அரசால் பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459