இ -புக் பின்னாளில் கூகுள் புக்ஸ், பிடிஎஃப், கிண்டில்… எனப் பல வகைகளில் கிடைக்கத் தொடங்கின. தற்போது, கொரோனாவால் ஏற்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வாசகர்களால் புதிய அச்சு புத்தகங்களை வாங்க இயலவில்லை. இதனால் பல தரப்பட்ட இ – புக் நிறுவனங்கள், ஊரடங்கையொட்டி இலவச புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு புத்தகப் பிரியர்கள் ஊரடங்கு காலத்திலும் தங்களுக்கு பிரியமான புத்தகங்களைப் படித்துவருகின்றனர். இப்போது உள்ள சூழ்நிலையில் நூலகங்களும் மூடப்பட்டுள்ளாதால், அவையும் இ-புக் வழியே தங்களது புத்தகங்களை இலவசமாக அளித்து வருகின்றன.
இப்படி ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு இலவச புத்தகங்களை அளித்துவரும் சில இணையத்தளங்களைப் பார்க்கலாம்.
இப்படி ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு இலவச புத்தகங்களை அளித்துவரும் சில இணையத்தளங்களைப் பார்க்கலாம்.
1. ஸ்கிரிப்ட் (Scribd)
‘ஸ்கிரிப்ட்’ அமெரிக்காவின் இ-புக் சேவை இணையதளமாகும். ஆடியோ வடிவத்திலும் நூல்களைப் படிப்பதற்கான வசதி இதில் உள்ளது. இந்நிறுவனம், தனது எல்லா இணைய வழி புத்தகங்களையும்
, மாத இதழ்களையும், ஒலி புத்தகங்களையும் ஒரு மாத காலத்திற்கு இலவசமாக வழங்குகிறது. அதாவது, நீங்கள் ஸ்க்ரிப்ட் இணையதளத்தில் பதிவுசெய்த பின், ஒரு மாத காலத்திற்கு இலவசமாக எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் படிக்கலாம்; கேட்கலாம்.

இணையதள முகவரி:
Scribd.com
2. தி இன்டர்னெட் ஆர்கிவ் (The Internet archive)
இது, அமெரிக்காவின் டிஜிட்டல் நூலகமாகும். கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக, தேசிய அவசரகால நூலக சேவையை வழங்கிவருகிறது.
இதனால் தங்களது இணையதளத்தில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை இலவசமாகப் படிக்கும் வாய்ப்பை அளித்துள்ளது. தற்போது இந்த நூலகத்தின் உறுப்பினராக இல்லாமல்கூட உங்களால் சில புத்தகங்களைப் படிக்க முடியும்.

https://archive.org/
3. பைகோஷ் (BYGOSH)
பைகோஷ், சிறுவர்களுக்கான சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் போன்றவற்றை உள்ளடக்கிய இணையதளமாகும். இதில் ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப சிறுவர்களுக்கான நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதில் உள்ள எல்லா ஆங்கிலப் புத்தகங்களையும் இலவசமாக சிறுவர்கள் படிக்கலாம்.
இதில் உள்ள எல்லா ஆங்கிலப் புத்தகங்களையும் இலவசமாக சிறுவர்கள் படிக்கலாம்.
இணையதள முகவரி:https://bygosh.com/
4. ஸ்பாடிஃபை (Spotify)
ஸ்பாடிஃவையில் உள்ள எல்லா ஒலி புத்தகங்களும் தற்போது இலவசமாகக் கிடைக்கின்றன. இப்போது ஆங்கிலத்தில் 'தி இன்விஸிபல் மேன் ,'தி அட்வென்டர் ஆஃப் ஹக்கிள்பீரி ஃபின்,மார்க் ட்வைன் புத்தகங்கள் போன்றவை இலவசமாகக் கிடைக்கின்றன. தமிழில் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், லா.ச.ரா புத்தகங்கள் மற்றும் சிறுவர்களுக்கான கதைகள் ஆகியவை இலவசமாகக் கிடைக்கின்றன.
இணையதள முகவரி:
https://www.spotify.com/in/
5. ஆடிபிள் (Audible)
அமேசானின் ஒலி புத்தக இயங்குதளமான ஆடிபிள், குழந்தைகளுக்கான கதைகளை ஆறு மொழிகளில் இலவசமாக அளிக்கிறது. இவற்றை வயதிற்கேற்ப வகைப்படுத்தியும் வழங்குகிறது. ஆடிபிளின் இந்த இலவச சேவையை மொபைல், லேப்டாப், டெக்ஸ்டாப் என எல்லா வகை சாதனங்கள் மூலமாகவும் பயன்படுத்தலாம் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இணையதள முகவரி: audible.in
6. ஆப்பிள் புக்ஸ் (Apple Books)
ஆப்பிள் நிறுவனம், ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே படிப்பதற்காக சில புத்தகங்களை மட்டும் இலவசமாக பயனாளர்களுக்கு வழங்கிவருகிறது. இவற்றை 'ஸ்டே அட் ஹோம்' என்ற தலைப்பின் கீழ் வரிசைப்படுத்தியுள்ளது. இதில் சிறுவர்களுக்கான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. இதனை ஆப்பிளின் புக்ஸ் செயலியின் மூலம் பயன்படுத்தலாம். இதில் ஒவ்வொரு சீரிஸிலும் உள்ள முதல் புத்தகத்தை இலவசமாகப் படிக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. இதோடு, கல்விக்குத் தேவையான புத்தகங்களையும் இலவசமாக வழங்குகிறது ஆப்பிள் புக்ஸ்.
ஐ.ஓ.எஸ் செயலி:
Apple books IOS app
7. கிண்டில் (Kindle)
அமேசானின் கிண்டிலில் எண்ணற்ற இலவச புத்தகங்கள் உள்ளன. இதில் கிண்டில் அன்லிமிடெட்டின் பயனாளர்கள் தற்போது மாதத்திற்கு பத்து டாலர் செலுத்தி முன்பை விட அதிக அளவிலான புத்தகங்களைப் படிக்கலாம். இதைப் புதிதாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 30 நாளைக்கு கிண்டிலில் இலவசமாகப் படிக்கலாம். இதனை கிண்டிலின் செயலி வழியாக கம்ப்யூட்டர், டேப்லட் உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் படிக்க முடியும்.
செயலி: Kindle Android app
8. கூகுள் பிளே (Google Play)
ஆண்ட்ராய்டில் உள்ள கூகுள் ப்ளே ஸ்டோரிலும் இலவசமாக எண்ணற்ற புத்தகங்களைப் படிக்கலாம்.
இதில் சுலபமாக க்ளாசிக் நாவல்களையும் உங்களால் படிக்க முடியும். ஆப்பிளைப் போலவே கூகுள் ப்ளே ஸ்டோரிலும் கல்விக்கான முதன்மை புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதில் சுலபமாக க்ளாசிக் நாவல்களையும் உங்களால் படிக்க முடியும். ஆப்பிளைப் போலவே கூகுள் ப்ளே ஸ்டோரிலும் கல்விக்கான முதன்மை புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இணையதள முகவரி: Google play
வாசிப்பு மற்றும் டெக்னாலஜியின் போக்கு குறித்து, அச்சு மற்றும் மின்னூல் என இரண்டு வடிவங்களிலும் புத்தகம் வெளியிட்டுள்ள எழுத்தாளர் பாலகுமார் விஜயராமனிடம் பேசினோம். “அச்சு இதழ்கள் இன்று மின்னூல்களாகவும், ஆடியோ புத்தகங்களாகவும் கிடைக்கின்றன. ஒருவரின் கதையை இருவர் உரையாடல்களாகப் பேசி வெளியிடுகின்றனர்.
மொபைல் பயன்பாடால் இளைஞர்களுக்கு கிண்டில் வாசிப்பு எளிமையாக இருக்கிறது. எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை மின்னூல்களாக வெளியிடுவதும் இதில் எளிமையாக இருக்கிறது.
மொபைல் பயன்பாடால் இளைஞர்களுக்கு கிண்டில் வாசிப்பு எளிமையாக இருக்கிறது. எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை மின்னூல்களாக வெளியிடுவதும் இதில் எளிமையாக இருக்கிறது.
பதிப்பகங்களில் புத்தகம் வெளியிடுகையில், வியாபாரம் உள்ளிட்ட காரணங்களால் நூல் வெளிவரத் தாமதமாகலாம்.
மின்னூல்களுக்கு அப்படியில்லை. எழுதும் ஆர்வமும் எழுத்துப் பயிற்சியும் இருந்தால், எவரும் தங்கள் படைப்புகளை மின்னூல்களாக வெளியிடமுடியும்.
மின்னூல்களுக்கு அப்படியில்லை. எழுதும் ஆர்வமும் எழுத்துப் பயிற்சியும் இருந்தால், எவரும் தங்கள் படைப்புகளை மின்னூல்களாக வெளியிடமுடியும்.
‘Pen To Publish’ போன்ற போட்டிகள் தமிழில் நடத்தப்படுவதற்குக் காரணம், இங்கு வாசகர்கள் அதிக அளவில் மின்னூல்களைப் படிக்கிறார்கள் என்பதால்தான்.
இதுபோன்ற போட்டிகளின்போது எழுத்தாளர்கள் தங்கள் நூலுக்கான மார்க்கெட்டிங் பணியையும் தாங்களே செய்ய வேண்டும்” என்றார்.