தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த கேரளா - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/04/2020

தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த கேரளா


திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா நோயின் தாக்கம் குறைந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதலில் கொரோனா நோய் பரவியது. முதல் கட்டத்தில் கடந்த ஜனவரி 30ம் தேதி சீனாவின் வுகானில் இருந்து வந்த மருத்துவ மாணவர்கள் 3 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சைக்குபின் அவர்கள் உடல்நலம் தேறினர். அதன்பின் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அடுத்த சில வாரங்கள் இந்த நோய் கேரளாவில் பரவாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் 8ம் தேதி இத்தாலியில் இருந்து வந்த பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மூலம் கேரளாவில் 2ம் கட்டமாக கொரோனா பரவ தொடங்கியது
. இவர்கள் மூலம் அவர்களது உறவினர்கள் உட்பட பலருக்கும் நோய் பரவியது.
இதைத்தொடர்ந்து துபாய், குவைத், இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து கேரளா வந்த 100க்கும் மேற்பட்டோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம் நோய் ேவகமாக பரவ தொடங்கியது.இந்த 2வது கட்ட நோய் பரவலும் தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. புதிதாக நோய் ெதாற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 3ம் தேதி முதல் 8ம் தேதி வரையுள்ள 6 நாட்களில் 59 பேருக்கு மட்டுமே ெகாரோனா கண்டறியப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் இந்த நாட்களில் இதைவிட பலமடங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நோய் பாதிக்கப்பட்டவர்களின் மரண சதவீதமும் கேரளாவில் மிகக்குறைவாகும். உலக அளவில் 5.75 ஆகவும், இந்திய அளவில் 2.83 ஆகவும் இருக்கும்போது, கேரளாவில் 0.58 சதவீதம் மட்டுமே கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459