உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என கூட சிந்தித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மனதளவிலும் பொருளாதார ரீதியிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே கொத்து கொத்தாக மடியும் மக்கள்
. இதற்கு எப்போது தான்  தீர்வு கிடைக்குமோ என ஏங்கி வீடுகளில் மக்கள் முடங்கி இருக்கும் பரிதாபம்…
இனிவரும் காலங்களில் எதற்கெல்லாம் பஞ்சம் ஏற்பட போகிறதோ என்ற எதிர்பார்ப்பு.. மனதில் பல வித பயம் .
இப்படி  ஒரு தருணத்தில் இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதற்கிடையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு  நடவடிக்கையில் மும்முறை பல்வேறு  அறிவிப்புக்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. உலக அளவில் கிடைக்ககூடிய செய்திகளும் முழுக்க முழுக்க கொரோனாவை சார்ந்தே இருக்கிறது . அந்த வகையில் தற்போது கிடைத்த சில முக்கிய அறிவிப்புகள் கீழே ..!

இந்தியாவில் 20471 பேர் பாதிப்பு..! 652 பேர் பலி
இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானோர்களின் எண்ணிக்கை 20,471 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 652 பேர் பலியாகியுள்ளனர். 3960 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தண்ணீரில் கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியது. ஆனால் இந்த வைரஸ் எதன் மூலம் பரவியது என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது உலக நாடுகள்
. இந்த நிலையில் கால்வாய் நீரில் கொரோனா வைரஸ் இருப்பதாக பிரான்ஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த நாட்டில் உள்ள இரண்டு ஏரிகளின் தண்ணீரை ஆய்வு செய்தபோது கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இரண்டு ஏரிகளுக்கும் சீல் வைத்துவிட்டது பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது