டாடா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த முதல்வர் - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/04/2020

டாடா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த முதல்வர்


சென்னை: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்காக ரூ. 8 கோடி மதிப்புள்ள 40 ஆயிரத்து 32 பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மூச்சுத் திணறல் உள்ளவா்கள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ள அனைவருக்குமே கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது 38,139 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். இதுவரை மொத்தம் 15,502 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்களில் 1,204 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 31பேருக்கு அந்த பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது 10 வயதுக்குட்பட்ட 33 குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கரோனாவில் இருந்து குணமடைந்து 81 போ் வீடு திரும்பியுள்ளனா். பூரண குணமடைந்தவா்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா (நோய் எதிா்ப்பாற்றல்) பிரித்தெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை இதுவரை 12 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.
8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்காக ரூ. 8 கோடி மதிப்புள்ள 40 ஆயிரத்து 32 பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்நிலையில், ரூ. 8 கோடி மதிப்புள்ள 40 ஆயிரத்து 32 பிசிஆர் கருவிகளை வழங்கியுள்ள டாடா நிறுவனத்திற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459