அமைச்சரையும் விட்டுவைக்காத கொரோனா .... - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/04/2020

அமைச்சரையும் விட்டுவைக்காத கொரோனா ....


சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா
இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. 
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவில் முதற்கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நாளடைவில் வைரஸ் பரவல் அதிகரித்து வந்த நிலையில் மேலும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக அமைச்சரை கொரோனா தாக்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலமான மகாராஷ்டிராவில்
அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அமைச்சரின் பாதுகாவலர்கள், உதவியாளர்கள் 14 பேருக்கு ஏற்கனவே கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜிதேந்திரா அவஹாத், 55 , இவருக்கு நேற்று மூச்சுதிணறல் ஏற்பட்டதையடுத்து மும்பாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்
. அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
 இதனை அடுத்து அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இம்மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 5600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரில் முதல் மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459