ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ரேபிட் டெஸ்ட் கருவிகளை கொரோனா பரிசோதனைக்கு மத்திய, மாநில அரசுகள் பெரிதும் நம்பின. அதன்மூலம் விரைவில் கொரோனா முடிவுகள் தெரிந்துவிடும் என்பதால் அரசுகள் அதனை போட்டிபோட்டுக் கொண்டு இறக்குமதி செய்தன.
இந்நிலையில் ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன . இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் கொடுத்த தகவலின்படி பரிசோதனை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கொச்சியை மறக்கவே முடியாது; மீண்டும் வருவேன்”- நெகிழ வைக்கும் அமெரிக்க சுற்றுலாப் பயணி..