கொரோனாவால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம் கண்டுபிடிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/04/2020

கொரோனாவால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம் கண்டுபிடிப்பு


கொரோனா வைரசுக்கு உலக அளவில் அதிகமாக பலியாகி இருப்பது ஆண்கள் தான். இறப்பு விகிதத்தில் ஆண்களின் எண்ணிக்கை 2.8 சதவீதமாகவும், பெண்களின் எண்ணிக்கை 1.7 சதவீதமாகவும் உள்ளது.  இத்தாலியில் இறந்தவர்களில் 80 சதவீதம் ஆண்கள், 20 சதவீதமே பெண்கள். இங்கிலாந்தில் இறப்பு விகிதமானது, பெண்களில் ஒரு லட்சம் பேருக்கு 840.9 ஆகவும் ஆண்களில் ஒரு லட்சம் பேருக்கு 1,728.2 ஆகவும் உள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
உலகம் முழுக்க எடுக்கப்பட்ட அனைத்து ஆய்விலும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள்தான் என்பது திட்டவட்டமாக கூறப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளில் ஆண்கள் அதிக குடிப்பழக்கம் உடையவர்கள் என்பதால் அவர்களின் நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்கின்றனர்.
மேலும், இயற்கையிலேயே ஆண்களை விட பெண்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம். பெண்களின் மரபணு, ஹார்மோன், குரோமோசோம்கள் என அனைத்துமே எந்த வகையான வைரசையும் எதிர்த்து போராடும் ஆற்றல் கொண்டதாக உள்ளன. இதனால், எந்த வைரசும் பெண்களை அதிகம் பாதிப்பதில்லை.
இப்படியிருக்க, மும்பையில் வைரசில் இருந்து குணமடைந்த 68 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் புது விதமான விஷயம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, ஆண்கள் அதிகளவில் பலியாவதற்கும், நோயிலிருந்து குணமடைவதற்கு அதிக நாட்கள் ஆவதற்கும் காரணமே விந்து பைகள் தானாம்
. ஏசிஇ- 2 எனப்படும் ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்சைம் – 2 என்ற அதிக எண்ணிக்கையிலான புரதத்தை விந்து பைகள் அதிகளவில் உற்பத்தி செய்வதே நோய் தொற்றிலிருந்து குணமடைவதற்கு அதிக நாட்கள் ஆகிறது. இந்த புரதத்தை தான் கொரோனா வைரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிக நாட்கள் உயிர் வாழ்கிறது. பொதுவாக பெண்கள் உடலில் கொரோனா வைரஸ் 4 நாட்களில் அழிந்து விடும் என்றால், ஆண்கள் உடலில் 6 நாட்கள் ஆகிறது. உடலின் மற்ற பாகங்களை விட விந்துப்பையில் தான் கொரோனா வைரஸ் அதிக நாட்கள் தங்குகிறது. இதற்கு மற்றொரு
காரணம், விந்துபைகள் நோய் எதிர்ப்பு மண்டலத்திலிருந்து பிரிந்து இருப்பதுதான். எனவே, கொரோனா வைரசின் தேக்க இடமாக விந்துப் பைகளை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இந்த ஆய்வு இன்னும் பகுப்பாய்வு செய்யப்படவில்லை.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459