தமிழக முதல்வர் வாகனம் செல்வதற்காக ஆம்புலன்ஸஸை காவல்துறை சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைத்ததால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியுடன் காணொளி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகம் வந்தார்
. அப்போது அவர் செல்லும் சாலையில், ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக சென்ற வாகனங்களை போலீஸார் வெகுநேரம் நிறுத்திவைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.
பொது முடக்க காலத்தில் பெரும்பாலும் சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன. பிரதமருடனான ஆலோசனை கூட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்பதால் முதல்வர் வாகனம் வருவதற்காக ஏதேனும் மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கலாம். ஆனால், அதை விடுத்து ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ள கனிமொழி எம்.பி, “முதல்வர் அவர்களே, சில நாட்களுக்கு முன்பு, முழு முடக்கத்துக்குள் ஒரு முடக்கத்தை அறிவித்து, ஒட்டுமொத்த மக்களையும் வீதிக்கு கொண்டு வந்தீர்கள். இப்போது உங்கள் வாகனங்கள் செல்வதற்காக அத்தியாவசிய போக்குவரத்தையும், ஆம்புலன்ஸ்களையும் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்.
அடடா! இதல்லவோ மக்கள் பணி” என்று விமர்சித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை காவல்துறை, ஊரடங்கு மீறல்கள் காரணமாக வாகனங்கள் சோதனைக்காக நிறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளது. மேலும் ஆம்புலன்சில் எந்த நோயாளியும் இல்லை. முதலமைச்சர், எப்போதுமே தனது காவலருக்கான போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். என்றனர்.