மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது - மத்திய அரசு எச்சரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/04/2020

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது - மத்திய அரசு எச்சரிக்கை


மும்பை: மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் மும்பை பெருநகர பிராந்தியத்துக்கு உட்பட்ட தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்கள் மற்றும் புனே மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமான நிலையை எட்டியிருப்பதாக அண்மையில் மத்திய அரசு எச்சரித்திருந்தது.
இதை தொடர்ந்து மும்பை மற்றும் புனே மாவட்டங்களில் நிலைமையை நேரில் ஆய்வு செய்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மத்திய உணவு பதப்படுத்தல்
மற்றும் தொழில்துறை கூடுதல் செயலாளர் மனோஜ் ஜோஷி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவையும், மத்திய மின்சாரத்துறை கூடுதல் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவையும் மத்திய அரசு அமைத்தது.
இந்த குழுவினர் தற்போது மும்பை மற்றும் புனே நகரங்களில் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மனோஜ் ஜோஷி தலைமையிலான குழுவினர் மும்பையில்
உள்ள கஸ்தூர்பா மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மேலும் மும்பை மாநகராட்சி தலைமையகத்தில் அதிகாரிகளை சந்தித்து பேசியதுடன், முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப்பே
ஆகியோருடன் வீடியோ கான்பரன்சிங்கில் ஆலோசனை நடத்தினர். நேற்று மத்தியக் குழுவினர் அமைச்சர் ராஜேஷ் தோப்பேயுடன் தாராவியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். தாராவியில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ராஜிவ் காந்தி விளையாட்டு அரங்கத்துக்கும் மத்தியக் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த நிலையில், மும்பையில் கொரோனா வைரஸ் பரவல் உக்கிரமடைந்து வருவதாக மகாராஷ்டிரா
அரசுக்கு மத்தியக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இம்மாத இறுதிக்குள் மும்பையில் கொரோனா வைரசால் 42 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள மத்தியக் குழு, அதற்கடுத்த 15 நாட்களுக்குள் அதாவது, மே 15ம் தேதி வாக்கில் மும்பையில் கொரோனாவால் 6.50 லட்சம் பேர் வரை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இதனால், மே 15ம் தேதிக்குள் மும்பை நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு
நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்காக குறைந்தது 4.86 லட்சம் படுக்கை வசதிகள் தேவைப்படும் என்றும், குறைந்தது 13,600 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மத்தியக் குழு எச்சரித்துள்ளதாக
மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்தியக் குழுவின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்கிடையே, மகாராஷ்டிராவில் ேநற்று மேலும் 431 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 18 பேர் நேற்று பலியாகினர். இதன் மூலம் மகா ராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,649 ஆக வும், பலியானோர் எண் ணிக்கை 269 ஆகவும் அதிகரித்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459