எல்.ஐ.சி வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/04/2020

எல்.ஐ.சி வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு


மும்பை : எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு, வீட்டுக் கடனுக்கான வட்டியை, 7.5 சதவீதமாக குறைத்து, அறிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் சித்தார்த்த மொஹந்தி கூறியுள்ளதாவது:புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு, 7.5 சதவீதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படும். ஆனால், அவர்களது, சிபில் ரேட்டிங், 800 புள்ளிகளுக்கும் அதிகமாக இருக்க வேண்டும்.
நாட்டில், பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக, ரிசர்வ் வங்கி, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.எங்களுக்கும் குறைந்த வட்டியில் பணம் கிடைக்கிறது. எனவே, அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் குறைந்த வட்டிக்கான கடன், மேலும் அதிக நுகர்வோர்களை கொண்டு வந்து சேர்க்கும்.புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்கள், ஏற்கனவே எடுக்கப்பட்ட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையோ அல்லது புதிதாக எடுக்கப்படும் பாலிசியையோ இந்த கடனுடன் இணைத்தால்,
வட்டியில் மேலும், 0.10 சதவீதம் குறைத்து, 7.4 சதவீதத்தில் வழங்கப்படும்.வாடிக்கையாளர் எதிர்பாராத வகையில் மரணமடைய நேரிட்டால், வீட்டுக்கடனை செலுத்துவதை காப்பீடு பார்த்துக் கொள்ளும்.புதிய வீடு வாங்கும் வாடிக்கையாளரின் சிபில் ரேட்டிங், 800 புள்ளிகளுக்கு குறைவாக இருந்தால், அவர்களுக்கு சற்று கூடுதல் வட்டியில் கடன் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459