மே மாத மத்தியில் இந்தியாவில் பரவுவது அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் சேர்ந்து டைம்ஸ் நெட்வொர்க் பத்திரிகை குழுமம்ஆய்வு நடத்தி இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா,இத்தாலியில் நேரிட்ட கரோனாவைரஸ் பாதிப்பை அடிப்படையாக கொண்ட சதவீத மதிப்பீடுஉள்ளிட்ட 3 மாதிரிகளை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் மே மாதம் 22-ம் தேதி இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடிக்கு அரசும், சுகாதார உள்கட்டமைப்பும் எவ்வாறு செயல்பட முடியும் என்பதற்கான வழிகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஒருவேளை மே 15-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டால், செப்டம்பர் 15-ம் தேதி கரோனா பாதிப்பு பூஜ்யமாக குறைய வாய்ப்புள்ளது என்றும், மே 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டால் ஜூன் மாத மத்தியில் அது பூஜ்யமாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.