கொரோனா அச்சுறுத்தல் விடுமுறையால் வீட்டில் முடங்கியுள்ள மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் இணைய வழிக் கல்வியை பள்ளிக்கல்வித்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. காலவரையின்றி மூடப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்களால் மாணவர்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன
ve="true">
. அத்துடன் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலையிலும் உள்ளனர்.
இந்நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்கும் வகையில் இணைய வழிக் கல்வி முறையை தமிழக பள்ளிக்கல்வித்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, ‘e-learn.tnschools.gov.in’ என்ற இணைய தளத்தின் வழியே வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.