கொரோனவால் புரட்டிபோடப்பட்ட இயல்பு வாழ்க்கை - லெ . சொக்கலிங்கம், காரைக்குடி - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/04/2020

கொரோனவால் புரட்டிபோடப்பட்ட இயல்பு வாழ்க்கை - லெ . சொக்கலிங்கம், காரைக்குடி


21 நாட்கள்  ஊரடங்கும் மக்களின் பொதுவான வாழ்க்கை நிலையும்



பக்கத்து வீட்டுக்காரரிடம் கூட தொலைபேசியில் பேசும் அவலநிலை



காணாமல் போன   நெஞ்சு வலி,   ஆஞ்சியோ ஆப்ரேஷன்கள்



வயது மிகுந்த அனுபவ பெற்றவர்களின் கருத்து





                                    நண்பர்களே கடந்த 21 நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வாழ்க்கையில் பல்வேறு நிலைகள் மாற்றங்களை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் என்பது உண்மை . இந்த நிலையில்  80 வயது, 70 வயது, 60 வயதுகாரர்களிடம் பேசிய பொழுது இது போன்ற ஒரு நிலையை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களா என்று கேட்டபொழுது நாங்கள் வாழ்ந்த காலங்களில் ஒரு நாள் ஊரடங்கு இருக்கும், இரண்டு நாள் ஊரடங்கு இருக்கும். ஆனால் இதுபோன்று 21 நாட்கள் ஊரடங்கு நாங்கள் இதுவரை வாழ்க்கையில் பார்த்ததில்லை. இது எங்களுக்கு மிகப் பெரிய அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது என்று கூறுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பல்வேறு நோய்கள் வந்து இதுபோல் இறந்து இருக்கலாம் . ஆனால் இவ்வாறு ஊரடங்கு என்பது உலக அளவில் நடைபெற்றது இல்லை என்பதே அனைவருடைய கருத்துக்களாகும்.



விஞ்ஞானம் வளர்ச்சி அடையவேண்டும்



                                  பக்கத்து வீட்டுகாரரிடம்  கூட பலபேர்  தொலைபேசியில்  பேச வேண்டிய அவல நிலையில் இருக்கின்றோம்.
கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய கிருமியை பார்த்து பயந்து நம் வாழ்க்கையை கடக்க  வேண்டிய நிலையில் இன்றைய சமுதாய அமைப்பு நிலவுகின்றது. எவ்வளவு விஞ்ஞானத்தில் வெற்றி பெற்றிருந்தாலும்,
இன்னமும் வைரஸ் தாக்குதல்   விஞ்ஞானத்தில் நாம்  வெற்றி பெற வேண்டும் என்பதையே இத்தருணத்தில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. யாரைப் பார்த்தாலும், பயம் எங்கு பார்த்தாலும் பயம் ,பயத்தோடு வாழவேண்டிய   சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். காரணம் ஒரு சிறிய வைரஸ் கிருமி.



 காணாமல் போன   நெஞ்சு வலி,   ஆஞ்சியோ ஆப்ரேஷன்கள்





                     கடந்த 21 நாட்களில் நீங்கள் தொடர்ந்து கவனித்து வந்தால் மிகப்பெரிய அளவில் தனியார் மருத்துவமனைகள் இயங்கவில்லை
.தனியார் மருத்துவமனைகள் குறித்து பொதுவாக நண்பர்கள் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தபோது 24 மணி நேரத்தில் ஆபரேஷன் பண்ண வேண்டும் இல்லை என்றால் அவருடைய உயிருக்கு ஆபத்து என்று பல மருத்துவமனைகளில் நெஞ்சு வலி ஆபரேஷன் பண்ணி உள்ளார்கள் .ஆஞ்சியோ ஆப்ரேஷன் செய்து  உள்ளார்கள்.  ஆனால் கடந்த 21 நாட்களில் எந்த மருத்துவமனையிலும் ஹார்ட் அட்டாக்காண ஆபரேஷன்,அஞ்சியோவிற்கான   ஆபரேஷன் நடந்ததாக தெரியவில்லை. மேலும் தினசரி மாலை வேளையில் பார்த்தால்  பல தனியார் மருத்துவமனையில் தலைவலி , காய்ச்சல்,  கண்வலி,
அது , இது என்று பலரும்மருத்துவமனையை  நாடும் சூழ்நிலையை நாம் பார்த்திருக்கின்றோம். 21 நாளில் எந்த தனியார் மருத்துவமனையும் திறக்கவில்லை ஏன் என்றால் அவர்களுக்கும் பயம் .அவருடைய மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் அல்லது மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதித்துவிடும் என்று அவர்களும் திறக்கவில்லை. அதே நேரம் அரசு மருத்துவமனையில் முழு அளவில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாராட்டப்பட வேண்டியது



மனவியதிதான் - நோய் எதுவும் இல்லை



           பொதுவாக தனியார் மருத்துவமனைகளில் கூட்டங்கள் அதிக அளவில் காணப்படும். ஆனால் இந்த 21 நாட்களில் அவ்வளவாக பொதுமக்கள் யாரும் தனியார் மருத்துவமனையில் சுத்தமாக செல்லவில்லை . தனியார் மருத்துவமனைகளும் திறக்கவில்லை என்பதே உண்மை
.அப்படியானால் இந்த வியாதிகள் அனைத்தும் என்ன வகையான வியாதிகள்? மனவியாதிகள்தான் . இவை அனைத்தும் நோய் கிடையாது. மனநோய் அல்லது மனவியாதி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது .அதுதான் நாம் இங்கு கவனிக்கவேண்டியது
.இது குறித்து நான் பல நண்பர்களிடம் பல்வேறு தகவல்களை பேசினேன். இதுவே உண்மை என்றும் கூறினார்கள் .



 மாறிப்போன உடற்பயிற்சி



 வீட்டுக்குள்ளேயே சேரில் அமர்ந்து கையை,காலை ஆட்டுங்கள்



                     பொதுவாக சர்க்கரை நோயாளிகள் ,இருதய ஆப்ரேஷன் செய்தவர்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சி செல்ல வேண்டுமென மருத்துவர்கள் அறிவுரை சொல்வார்கள்.தினமும் ஒரு மணி நேரம் நடக்கவேண்டும் என்று சொல்வார்கள்.இது குறித்து சென்னையில் உள்ள பத்திரிக்கை நண்பர் ஒருவரிடம் பேசும்போது, இப்போது மருத்துவர்கள் வீட்டுக்குள்ளேயே நடங்கள் என்கிறார்கள்.சார், வீடு மிகவும் சின்னது சார் என்றால் ,சேரில் உட்கார்ந்து எந்திரிங்கள் என்று சொல்கிறார்கள்
.அதுவும் சிரமம் என்றால் ,ஒன்றும் தேவையில்லை, உட்கார்ந்த இடத்தில் கையை,காலை ஆட்டுங்கள் என்று சொல்கிறார்கள்.
சார் நீங்கள்தானே 45 நிமிடம் நடக்கவேண்டும் என்று சொன்னீர்கள் என்று கேட்டால்,அதெல்லாம் அப்போ சார்,இப்போ ஒன்றுமே வேண்டாம் நன்றாக இருப்பீர்கள் என்று சொல்கிறர்கள்.என்னத்த சொல்ல? என்று மருத்துவர்கள் குறித்தும் ,மருந்துகள் குறித்தும் ஆதங்கப்பட்டார்.





பொதுமக்களிடம் சமூக பரவல் குறித்து இன்னும் விழிப்புணர்வு அதிகம் வேண்டும்



                                 ஆனால் இந்த 21 நாட்கள் ஊரடங்கு அன்றாடம் சம்பாரித்து பிழைக்கும் மக்களை மிகப் பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
.நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அரசு மிக முடிந்த அளவு உதவிகள் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது . ஆனாலும் பெரும்பாலோனோரின்  வாழ்க்கை நிலை கேள்விக் குறியாகவே உள்ளது. என்பதுதான் உண்மை . நான் பணி நிமித்தமாக ஓரிரு நாள் வெளியே சென்றபோது  பார்க்கும் பொழுது காலையில் வாக்கிங் செல்பவர்கள் கூட்டமாக செல்வதை கண்டேன்
.சமூக இடைவெளி இல்லை. முகக்கவசம் இல்லை.இவர்கள் அனைவரும் படித்தவர்கள்,விவரம் தெரிந்தவர்கள் ,விழிப்புணர்வு பெற்றவர்கள், ஆனால் அதனை பயன்படுத்த தெரியாதவர்களாக உள்ளனர்
. மீண்டும் வரும் பொழுது ரோட்டில் வாட்டும் வெயிலில் கூட மிகப் பெரிய அளவில் பொதுமக்கள் யாரும் விழிப்புணர்வுடன் இல்லை என்பதே என்னுடைய கருத்து . இது மிகப்பெரிய வேதனையான விஷயம்.





காவலர்கள் தான் என்ன செய்வார்கள் ?





         சாலைகளில்  போக்குவரத்து மிக அதிக அளவில் இருக்கிறது. காவலர்களும் எவ்வளவு தான் சொல்லுவார்கள் ,அவர்களாலும் எவ்வளவுதான் முடியும், என்னுடைய நண்பர்கள் பலரிடம் பேசியபோது பல இடங்களில்
காவல் துறை சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் மக்கள் அவரவர் அவரவர் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் நிலை  மிகுந்த அளவில் காணப்படுகிறது என்று சொன்னார்கள்
.மக்கள் மிகப்பெரிய அளவில் சமுதாய விழிப்புணர்வு அடைந்தால் தான் இந்த நாடும்,  அவர்களுடைய குடும்பம் சிறக்கும் என்பது உண்மை.



 தனித்திருங்கள் - விழித்திருங்கள்



                    21 நாள் ஊரடங்கு பல விஷயங்களை நமக்கு கற்றுக் கொடுத்து இருக்கின்றது. இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு இனி வரக்கூடிய காலங்களிலும் நாம் முடிந்த அளவு பிறருக்கு உதவி
செய்தும்,  பிறருக்கு உதவி செய்யக் கூடியவர்களாக நாம் மாறியும் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து .எனவே நண்பர்களே அரசு சொல்வதை கேட்டு  தனித்திருங்கள் , விழித்திருங்கள் , வீட்டிலேயே இருங்கள்.



அன்புடன்

லெ . சொக்கலிங்கம்,

காரைக்குடி
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459